பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வடிவேலின் மைத்துனன் வந்து வடிவேலையும், தன் தங்கையையும் தங்களோடு வந்து இருக்கும்படிக் கூறி, இருந்த சொத்தை விற்று சுமார் நான்கு ஆயிரம் ரூபாய்களோடு கூட்டிக் கொண்டு வந்தான்.

மாமனார் ஊருக்கு வந்த பிறகுதான் வடிவேலன் தன் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தான். இருந்த பணத்தைக் கொண்டு எப்படியாவது பிழைக்கலாம் என்றான், அந்த பணமும் மைத்துனன் கையில் சிக்கிக்கொண்டது. மைத்துனன் ஊரிலிருந்து அழைத்து வந்த தன்னை, தனிக்குடித்தன மாக வைத்துவிடுவான் என்று அவன் எதிரிபார்க்கவே இல்லை

மைத்துனன் மனமிரங்கிக் குடும்பத்திற்கு வாங்கிக் கொடுத் திருந்த சாமான்கன் வைத்துக் கொன்டுதான் அவர்கள் நாட்களை, கடத்திக் கொண்டிருந்தனர். கை செலவுக்குக்கூட அவனிடம் பணம் இல்லை. எல்லாம்மைத்துனனிடம் ஐ அகப்பட்டுக்கொண்டது பணம் வேண்டும் என்று கேட்டதிற்கு, மைத்துனரிடமிருந்து வந்த பதில் வடிவேலனைச் சிந்திக்க் வைத்துவிட்டது.

இருதயமற்ற கொடியவளுகத் தன் மைத்துனன் மாறவான் என்று வடிவேலன் எண்ணியது கூட இல்லை, இப்படிப்பேச அந்த மாசேவியின் மனம் எப்படித்தான் துணிந்ததோ,

"உனக்கும், என் தங்கைக்கும் எந்த வகையுமான தொடர்பும் இல்லை என்று எழுதிக்கொடு: உனக்கு இருநூறு ரூபாய்கள் தருகின்றேன் என்றான் அந்தக் கொடியவன். .

மறுத்தான் வடிவேலன். அதன் பலன், வடிவேலன் மட்டகமாக நடத்தினன் மைத்துனன்.

மறைந்து கிடந்த மானஉணர்வு, உயிரின்மேல் இருந்த ஆசையை விரட்டியடித்தது.

சான சந்திக்க, அதளுேடு_சல்லாயிங் கொன்டாங் ஆதன் ஆணைப்பிலே சாத்தின்டை மனிதன் சில வேளைகளில் இவர் இ இஇஇருன். சாலைக் கண்டால் சஞ்சலங்கொண்டு அஞ்ஜ் தடுங்கு கிகி ஐ மனிதனுக்கு இது நீகை எப்படியோ ஒருசில வேனேகளின் ஆந்த் சக்திகை ஊட்டு கிடுகிறது.

வடிவேலன் சாவதற்குத் துணிந்துவிட்டான். மனைவி மக்கள் மறந்துமதித்து, மற்றும் உலகில் உள்ள் இனங்கள் அத்தனையும் துறந்து சாவுப்பெண்ணோடு சல்லாபம் செய்யத் துணிந்து விட்டான்.

    மனம்-2