பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இதழ்கவைத்து நறவருந்தி விரைந்து சேர்க்கும் ஈகண்டேன் எழுத்தாளர் நினைவு கொண்டேன்; கதவடைத்த கற்பனையைத் திறந்து புக்குக் கருத்துடனே சிந்தனையாம் மலர்தி ளைத்துப் புதுமைமிகும் இலக்கியத்தேன் சேர்த்தல் ஒன்றே பொறுப்புள்ள எழுத்தாளர் கடமை யாகும்: இதழ்கவைத்து மதுவருந்தித் திரிவோ ரெல்லாம் எழுத்தாளர் அல்லரெனும் உண்மை கண்டேன். வண்டொன்று பாடிவரக் கண்டேன் அங்கு வண்ண மலர்த் தேன்குடித்து மயங்கி இன்பம் கண்டவுடன் அறிவிழந்து சோலை எங்கும் கண்டகண்ட மலர்தோறும் மாறி மாறிக் கொண்டிருந்து பண்பாடித் திரிதல் கண்டேன்; குடிக்கின்ற எழுத்தாளர் கொள்கை மாறிக் கண்டபடி பாடிவரும் இயல்பைக் காட்டிக் களிவண்டு தனை மறந்து வீழ்ந்த தந்தோ! எழுத்தாளர் எனச்சொல்லி நிலையே யின்றி இன்றொன்றும் நேற்றொன்றும் குழப்பும் பாங் கில் முழுத்தாளில் அச்சடித்து விற்போ ரெல்லாம் முதன்மைபெறும் எழுத்தாளர் போல நின்று கொழுத்தார்கள் நாட்டுக்குப் பயனே இல்லை: கும்பிக்கும் புகழுக்கும் மொழியை நாட்டைப் பழித்தார்கள் பிழைத்தார்கள் இவரால் நாடு பாழாகும் விழிப்புணர்வு நமக்கு வேண்டும்;