பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தீண்டாமை, |கலிவெண்பா) நெஞ்சத்தால் துாயனவன் நேர்மை பிழைத்தறியான் வஞ்சத்தை ஒர் நாளும் வாழ்வதனிற் கண்டதில்லை; ஆண்டான் திருவடிக்கே ஆளடிமை செய்துவந்தான் ஆண்டவன் கோவிலுக் காகும் பொருளெல்லாம் கொட்டிக் குவித்திருந்தான் கூலி என வேலைசெய்து கொட்டிக் குவித் கான் குலமாண்ட வேதியற்கு; தன்னலமே கண்டதில்லை; தாண்டவமே கண்டதில்லை முன்னமவன் கண்டதில்லை; முத்திதரும் தில்லை.எனக் கண்டவர்கள் சொன்னதுண்டு கண்டுவரும் ஆர்வமிகக் கொண்டெழுந்தான் அன்புளத்துத் தொண்டனவன் ஆதனுTர் வந்துதித்த நந்தனவன்; வந்தவனை அந்தணர்கள் செந்தழலிற் போட்டுச் சிவபெருமான் பேர் சொல்லிச் செம்மைப் படுத்திவிட்டார்; செம்மல் கருமேனி வெம்மைச் சுடு தழலால் வேதித்தார் வேதியர்கள்; உள்ளத்தாற் சொல்லால் உடலால் எனுமூன்றால் எள்ளத் தனை பிறழா தென்றும் இருப்பானை தாண்டவமே கண்டதில்லை - நடனமே கண்ட தில்லைப்பதி F