பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 சீர்கெட்ட சமுதாய வீதி தன் னில் சிவப்புநிற விளக்குகளே ஒளிரக் கண்டேன் கூர்கெட்ட மாந்தருக்கு நெறியைக் காட்டிக் கூப்பிடுமோர் பச்சைநிற விளக்கைக் காணேன்: தேர்விட்ட நெடுந்தெருவில் மேடு பள்ளம் தெரியாமல் படர்கின்ற புதர்கள் கண்டேன்; வேர்கெட்ட எட்டிக்கு நீரை வார்த்தார் விழலுக்கே நீர்பாய்ச்சும் பேதை மாந்தர். கடவுளென வேதமெனச் சாத்தி ரங்கள் காட்டுகிற நெறிகளெனச் சொல்லிச் சொல்லி மடமையிலே மூழ்கிஒளிர் மதியைத் தேய்த்து மாந்தரையே மாற்றுகிற கயமை கண்டேன்; இடமுடைய மண்மீதில் நடப்ப தற்கோர் ஏற்றநெறி காட்டாமல் விண்ணை நோக்கிப் படர்வழியைக் காட்டுகிறார்: காவி ரித்தாய் பாலிருந்தும் காணலையே காட்டல் கண்டேன். ஒருத்தியென ஒருவனென உரைத்த காதல் உயர்வாழ்வை அகப்பொருளென் றொருபேர் தந்து பொருத்தமுற நம்முன்னோர் உரைத்து வைத்தார்; புதிய அலை எனும்பெயரால் படமெ டுப்போர் கருத்திலராய்ப் புறப்பொருளா மாற்றி விட்டார் காசுக்கு வளைவதற்குக் கூசாப் பெண்டிர் உருத்தெரிய மேனியெலும் உலர விட்டால் σ/ உருப்படுமோ சமுதாயம்? என்று நொந்தேன் -ms ப வ து- = ما خوية مق المرّة توكه كي لا