பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 لl rگاu கைவிரல்கள் செபமாலை உருட்டும் அமெய்யும் கால்வரையும் நீண்டதொரு சட்டை தொங்கும், உய்வழிகள் மற்றவர்க்கே அவர் வாய் ஒதும், உளக்குறிப்பை முகத்தாடி மறைத்துக் காட்டும், பொய்விளையும் நெஞ்சத்தை மறைக்கும் சின்னம் பொலிவுடனே அசைந்தாடி மார்பில் தொங்கும்; செய்வினைகள் திரைமறைவில் கயமை காட்டும்; திரிகின்றார் பக்தியெனும் பசுத்தோல் போர்த்து. மெய்யான மண்டலங்கள், மறுமை யின்பம் , மேலுலகம், என்றெல்லாம் நமக்குக் கூறிப் பொய்யான வேடத்தால் உலகை ஏய்க்கும் புரட்டர்களின் நடிப்பைப்போய் பக்தி என்றால் அய்யய்யோ ஆண்டவனே நைந்து போவான்; 'ஆத்திகளின் நாத்திகரே மேலாம் என்பான். "செய்யாத செயல்செய்யும் கொடிய ரெல்லாம் சேர்ந்திருக்கும் மறைவிடமா பக்தி' என்பான். வட்டிக்கு வட்டியென்று வாங்கி, ஏழை வயிறெரிய நெஞ்செரிய அவன்றன் வாழ்வில் பட்டினிக்கு வழிவகுத்துச் சுரண்டிச் சேர்த்துதுப் பாடுபடும் அவன் வீட்டில் இருளுண் டாக்கி, விட்டெரிக்கும் மின்விளக்கால் கோவி லுக்குள் வெளிச்சத்தைப் போடுகிறான்; விளக்கின் மேலே ஒட்டுகிறான் தன்பெயரை: விளம்ப ரத்தின் ஒருபகுதி தான் ஈது பக்தி யில்லை.