பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அச்சுப் பொறியில்லாக் காலம் அவன் காலம் நச்சிப் ப்டியெடுத்தார் நாவலன்றன் பாடல்களை ஏட்டில் எழுதும் எழுத்தாணிப் போக்கினிலே ஒட்டிக் கெடுத்தார்கள்; ஓதியநற் பாடல்களை வாய்மொழியாற் சொன்னவரும் வாய்போன போக்கினிலே போய்மகிழ்ந்தார்; பின்னர்ப் புகுந்துவிட்ட பேதங்கள் பாட்டுக்கு நூறாய்ப் பரந்து விரிந்தனவாம்; - நாட்டுக்குள் கம்பன் நயந்து வருவானேல் பாட்டுள் கிளைத்தெழுந்த பாடத்தைத் தன்செவியாற் கேட்டுக் களிப்பானோ? கேளாமல் வெம்பிடுவான்; ஆய்ந்துரைத்த தன் பாவில் யார்யாரோ கைவைத்துத் தோய்ந்துரைத்த பாடமிது துாயதிது வென்றே திருத்தங்கள் செய்வதையும் சிற்சிலபா கம்ப்ன் விருத்தங்கள் அல்லவென வெட்டிக் கழிப்பதையும் கம்பனவன் வந்திங்குக்ாண்பானேல் "இவ்வண்ணம் வம்புகள் செய்வதற்கு வாய்த்த முறையென்ன? இன்றெனது பாட்டில் இவர்க்கோர் உரிமையுண்டா?" என்றியம்பி நெஞ்சம் இனைந்தன்றோ வெம்புவான்; பாட்டுலகைக் காணப் பரிவோடு கம்பனிந்த நாட்டகத்தே வந்தால் நலிவெய்திப் போகானோ? பாடும் மரபறியார் பாட்டின் திறமுணரார் கூடும் இலக்கணத்தைக் கொல்லும் வகைதெரிவார் பாவென்ற பேராலே பாடித் தொகுத்தெடுத்து நாவொன்று கொண்டு நவில்கின்றார்; அன்னவர்தாம் நாட்டிற் கவிஞரென நல்லதொரு பேர்தாங்கி ೯೬4 எழுதியதும் ஏறுநடை போடுகின்றார்;