பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நன்றறிவு காண்கின்ற நாளிவர்க்கு வாராதோ?’’ என்றெல்லாம் எண்ணி இரங்கி.மனம் வெம்பிடுவான்; எல்லா வுயிர்க்கும் பிறப்பொக்கும் என்றுணர்ந்தும் அல்லா நெறிசென்றோம் அப்பிறப்பில் தாழ்வுயர்வும் செல்வம் பதவியெனச் செப்பும் அவற்றுள்ளும், பல்வகைய வேற்றுமை பண்ணிப் ಕ್ಲಿ; கொடுப்பாரும் அப்பொருளைக் கொள்வாரும் இல்லா மிடுக்கான ஒருலகம் வேண்டும் என வெண்ணிக் காதையொன்று கண்டான் கனவொன்றுங் கண்டானிங் கேதொன்றுங் காணவிலை இன்றுவந்த நம்கம்பன் தீது மிகக்கண்டான் தேவையிலா வேற்றுமைகள் மோதி வரக்கண்டான் மூச்செறிந்து வெம்புகிறான்; பெண்மைக் குயர்வுதரப் பேணி மதிப்பளிக்கக் கண்ணுக் கினையாக் கருதிவர எண்ணிச் சிறையிருந்தா ளேற்றத்தைச் செப்பினான் கம்பன் நிறைமிகுந்த பெண்டிர் நெறிபிறழ்ந்து செல்வதையும் நாகரிகப் பேரால் நடமாடிச் சீர்குலைந்து வேகமுடன் பாழ்நிலைக்குள் வேண்டிப் புகுவதையும் ஆடைக் குறைப்பென் றலங்கோலஞ் செய்வதையும் மேடைப் பொருளாகி மேல்மினுக்கித் தாழ்வதையும் காணுங்கால் நம் கம்பன் கண்பொத்தி நின்றிடுவான்; நாணம் எனுமொன்றை நாடே வெறுத்ததென வேடன் கைப் புள்ளேபோல் வெம்பியே போய்விடுவான் நாடுபுகழ்க் கம்பன் நலிந்து