பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 லும் சொல்லு, ப்ரொட்யூஸர்களிடம் அப்படிச் சொல்லி விடாதே!' 'சரி, நீ போ! - நான் குளித்துவிட்டு வருகிறேன்....” 'இன்ஸ்பெக்டரிடம் என்ன சொல்ல?” 'எனக்குப் பிறந்த நாள் என்று சொல்லித் தொலையேம்மா!' 'நல்ல யோசனைதாண்டி, நான் வரேன்!' குஞ்சம்மாள் திரும்பி இரண்டடிகள் தான் எடுத்து வைத்திருப்பாள் - அதற்குள் ஏதோ நினைத்துக் கொண்ட லீலா, 'அம்மாம்மா, இன்னொரு விஷயம்..” என்று இழுத்தாள். 'என்ன?' என்று கேட்டுக்கொண்டே அவளுக்கு எதிரே வந்து நின்றாள் குஞ்சம்மாள். 'அவர்களிடம் நான் குளித்துக்கொண்டிருப்பதாக மறந்து கூடச் சொல்லி விடாதேம்மா, எல்லாருமாகச் சேர்ந்து என் உடம்பைத் தேய்த்து விட இங்கேயே வந்துவிட்டாலும் வந்துவிடுவார்கள்!' 'இவ்வளவுதானே? - இன்னும் நீ படுக்கையை விட்டே எழுந்திருக்க வில்லை என்று சொல்லி விடுகிறேன் - போதுமா?” என்று 'பாத் ரூம்' - கதவைச் சாத்தி, "எதற்கும் உள்ளே தாளிட்டு வைத்துக் கொள்; நல்லது!’ என்று குஞ்சம்மாள் எச்சரித்து விட்டுப் போனாள். அதற்கேற்றாற்போல் அன்று வராந்தாவில் கூடியிருந்த அத்தனை படாதிபதிகளும் ஒரே ஒரு ஆத்மாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள் - அந்தப் பேர்வழி யார் என்கிறீர்கள்? - படாதிபதி பத்மனாபன்தான்! 'உங்களுக்குத் தெரியுமோ?' என்றார் ஒருவர் 'தெரியாதே' என்று கையை விரித்தார் இன்னொருவர். 'நேற்று நம் பத்மனாபனுக்கு யோகம் அடித்திருக்கிறது ஸார், யோகம்!” 'குதிரைப் பந்தயத்தில் ரூபாய் பத்தாயிரம் கிடைத்ததே, அதைத்தானே சொல்கிறீர்கள்? - எனக்குக்கூடத்தான் போன வாரம் இருபதாயிரம் கிடைத்தது...'