பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 'இனி நீங்கள் கார் அனுப்ப மாட்டீர்கள் என்று தெரியும்; அதனால்தான் என் கால்களைக் கொண்டே வந்துவிட்டேன்!” 'ஏனாம்?’’ கதையோ முடிந்துவிட்டது; இனி காசு வாங்க வேண்டியதுதானே பாக்கி!' இந்தச் சமயத்தில் டைரக்டர் சோமு குறுக்கிட்டு, 'கதையை நீங்கள் முடித்து விட்டால் போதுமா ஸார், நாங்கள் அதைப் பார்க்க வேண்டாமா?' என்றார். 'ஐயோ பாவம், அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது? என் கணக்கைத் தீர்க்கும் வரை, அல்லது என் கதையைத் திருடி அதை வேறு யாருடைய பெயரிலாவது வெளியிடும் வரை, 'உங்கள் கதையை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை' என்று நொண்டிச் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் - அவ்வளவுதானே?” 'கேட்டிரா, பீதாம்பரம்? இவருடைய கதையைப் பார்ப்பதற்காக என் அருமையான காலத்தை நான் வீணாக்க வேண்டுமாம்!' 'அவன் கிடக்கிறான், வாழத் தெரியாதவன் - நீங்கள் வாருங்கள், போவோம்!” என்று 'வெறும் பிரியானி வீர'னை வீராப்புடன் அழைத்துக்கொண்டு நடந்தான் 'காக்கா’. 'சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா!' என்று அலுத்துக் கொண்டான், மானத்தைத் தவிர வேறொன்றையும் பெரிதாக மதிக்காத ஏழை கந்தசாமி. பூர்வ கதை முத்தாயி கண்ணிழந்தவள்; அவளுக்குக் கைக்கோலாயிருந் தான் அவளுடைய ஒரே மகனான ரத்தினம். இவர்கள் இருவருக் கும், இவர்களைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் மனிதர்கள் அளிக் காத ஆதரவை ஒரு தெரு விளக்கு அளித்துக்கொண்டிருந்தது. அதன் மடியிலே இவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். முத்தாயி பிச்சைக் காரியாயிருந்து பணக்காரர்களின்