பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரசிகமணி டி.கே.சி. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஒர் அரிய அனுபவம். திருநெல்வேலிச் சீமையிலுள்ள பாபநாசம் என்னும் ஸ்தலத்தைக் குறித்துப் பலரும் அறிவார்கள் திருக் குற்றாலத்திற்கு அடுத்தபடியாக, இதைத்தான் ஸ்தல மகிமைக்காகவும் காட்சி யழகுக்காகவும் பாராட்டுவது வழக்கம். இங்கேயுள்ள அருவி தனிச் சிறப்பு வாய்ந்தது. அருவி ஆறாகப் பாய்ந்து கோயிலின் அருகாக ஓடுகிறது. ஆற்றிலே பல நிறங்கள் கொண்ட மீன்கள் கூட்டமிட்டுப் பயமில்லாமல் சுயேச்சையாய் நிரம்பித் திரிகின்றன. நீரில் இறங்கியவர்களின் பாதங்களை இம்மீன்கள் நக்குவதும், மக்கள் கூச்சலிட்டு அங்குமிங்கும் கரைகளுக்கு ஒடுவதும் பார்த்து அனுபவிக்க வேண்டிய காட்சியாகும். பெரும் பாறைகளும் அவற்றின் மீது குடும்ப சகிதமாய்க் கூடி, ஒன்றுக்கொன்று பேன் பார்க்கும் குரங்கினங்கள் மகிழ்ந்திருக்கும் காட்சி. சில முரட்டுக் குரங்குகள் தைரியமாய், சிறியோர், பெரியோர் என்ற வேறுபாட்டையும் கவனியாமல், மக்கள் வைத்திருக்கும் சோற்றுண்டைகள், தின்பண்டங்கள் முதலியவற்றைப் பறித்துக் கொண்டோடுவது வேறொரு காட்சி. பச்சைப் பசேலென்று தழைத்து ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள் செறிந்த சோலையை ஊடுருவி வந்து அருவி குளிர்ச்சியோடும் காட்டுப் பூக்களின் நறுமணத்தோடும் எங்கும் உலவி மக்கள் இதயத்திற்குச் குளிர்ச்சியை யும் இன்பத்தையும் ஒருங்கே அளிக்கும் அனுபவம் எவ்விடத்தும் கிடைத்தற்கரியதாம். - குற்றாலத்தில் நாகரிகம் புகுந்துவிட்டது; சிறிய பங்களாக்களும் பெரிய பங்களாக்களும், ஹோட்டல்களும் மிகுந்துவிட்டன, ஜனங்கள், முக்கியமாகச் செல்வந்தர்களும் உத்தியோகஸ்தர்களும் நிரந்தரமாய் வரத்தொடங்கி விட்டார்கள். nஸன் தொடங்கிவிட்டாலோ, கேட்க வேண்டாம். குற்றாலம் சென்னை நகரம் போல் ஆகிவிடுகிறது. இந்த நாகரிகக் கோலாகலம் பாபநாசத்தில் இல்லை. சில காலத்திற்கு முன் ஏற்படுத்திய 'மில் தொழிலாளர்கள் ஏகதேசமாய் வருவது போவது தவிர, வேறு ஜனசந்தடி கிடையாது ஆனால், அங்கே நீராடி விட்டு, கோயில் கொண்டிருக்கும் சுவாமியையும் தேவியையும் வணங்குவதற் காக வரும் பக்திமான்களைக் காலையிற் காணலாம். சிலபோது அந்நிய