பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரீமதி லுவினா அவர்களுக்கு ஜெயகாந்தன் நண்பர் கமல் உங்களுக்கு எழுதிய 'காதல் கீத'மும் அவருக்கு நீங்கள் வரைந்த 'சோககித மும் படிக்க இனித்தன. ஆனால் சிந்தித்துப் பார்க்கக் கசந்தன! உங்களுக்கிடையே கைகளை நீட்டி, உங்கள் இருவருக்கும் கடிதங்களையல்ல - கருத்துக்களைப் பரிமாறத் துணிந்த நான், உங்கள் காதல் துரதனல்ல; காலத்தின் துரதன். அப்படியென்றால், சமுதாயத்தின் இற்றுப்போன பழமை களைத் துடைத்தெறிய வேட்கை கொண்ட புரட்சிக்காரர்களில் நானும் ஒருவன் என்று அர்த்தம்! ஊசலாடும் உயிரே! உங்களைப் போன்றவர்களுக்குக் காதல் மாயை என்பது முற்றிலும் உண்மை-அது மட்டும் அல்ல-அது வெறும் சபலம்; துடிக்கும் மாமிச வெறி! நாளடைவில் அது பொய்த்து விடும் என்ற அன்பைத் தவிர வேறொன்றும் அறியாத கமலுக்குத் தெரியுமா?. அவரோ உணர்ச்சியின் அடிமை; நீங்களோ உணர்ச்சியின் எஜமானி. ஆனால் நானோ, மனிதர்களை வெறும் மனிதர்களாக மட்டும் பார்ப்பதில்லை; வர்க்கம் வர்க்கமாகப் பிரித்துப் பார்க்கிறேன்; ஒவ்வொருவனுடைய குணாம்சத்தையும் எடை போட்டுக் கணிக்கிறேன். அவ்வாறு கணிக்கும் போது ஒன்றுக் கொன்று முரண்பட்ட இரண்டு வர்க்கங்களுக்கிடையே, இன்னொரு மூன்றாவது வர்க்கமும் இடம் பெற்றிருப்பதை நான் உணர்கிறேன். அந்த வர்க்கத்திற்குத் தனிப்பட்ட இடம் எதுவும் சரித்திரத்தில் கிடையாது. ஏனெனில் அது 'கனவு காணும் வர்க்கம்; சபல சித்தம் படைத்த சாதாரணக் கூட்டம் - ஆட்டு மந்தை!