பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நான் கொடுத்த கடிதத்தை எடுத்துக் கொண்டு வேலைக்காரச் சிறுவன் வீட்டை விட்டு வெளியே சென்றது முதல், தங்கள் கடிதம் கிடைக்கும்வரை என் உள்ளம் எவ்வளவு பாடுபட்டது என்பதைத் தாங்கள் அறிய மாட்டீர்கள். அறிந்திருந்தால் என்னை உணர்ச்சியின் எஜமானி என்று அழைத்திருக்கமாட்டீர்கள்! இருளகற்றும் விளக்கே! எது எப்படியிருந்தாலும் சோர்ந்துபோன என் உள்ளத்திற்குத் தங்கள் கடிதம் புதுத்தெம்பை ஊட்டியது. தாங்கள் அனுப்பி யிருந்த அந்த மருந்து என் உள்ளத்திலிருந்த ரணம் அழுகி, புரையோடி, நாற்றமெடுத்துப் போகாமல் தடுத்தது. புயலிலும் மழையிலும் அடிபட்டு ஒய்ந்துபோன மனத்துக்குத் தூக்குக் கயிறு அமைதியைக் கொடுக்கும் என்று பல தடவைகள் நான் எண்ணினேன். ஆனால் தங்கள் கடிதமோ 'வாழவேண்டும்; வாழவே பிறந்தோம்’ என்ற எண்ணத்தை வளர்த்து, என் தற்கொலை எண்ணத்தைத் தகர்த்தெறிந்து விட்டது. என் ஆருயிர்க் கமலுக்குக் கடிதம் எழுதும்போது ஒன்றே ஒன்றை மட்டும் நான் எண்ணிப் பார்க்கவில்லை. கமலைத் தவிர்த்து வேறொருவரை மணந்து கொண்டு என்னால் நிம்மதி யுடன் வாழ முடியுமா என்பதுதான் அது! நான் நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு, ஆடவர், நேசிக்காத ஓர் இதயம், இதுவரை எண்ணி, கனவு கண்டு, நம்பிக்கையோடு காத்திருந்ததற்கு முற்றிலும் மாறான ஒரு பிணைப்பு, ஒரு சூழ்நிலை-இவற்றில் நான் எப்படி வாழ முடியும்? வாழ்ந்திருக்க முடியும்? எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டேன் - நல்ல வேளையாக அக்கினிப் பிரவேசம் செய்யத் தயாராயிருந்த பரதனைக் காக்க வந்த அனுமானைப் போலத் தங்கள் கடிதம் வந்து என்னைக் காத்தது. லைலாவையும் காயஸையும், அனார்கலியையும் சலீமையும் - எல்லாவற்றிற்கும் மேலாக, அழுத்தம் திருத்தமாக மார்க்ஸையும் ஜென்னியையும் பற்றித் தாங்கள் எழுதியிருந்தீர்கள்! காதல் மட்டும் கடமையல்லவா?’ என்று ஆணித்தரமாகக் கேட்டிருந் தீர்கள். இவற்றை வைத்துக் கொண்டு புதுமையையும் பழமையையும் அலசிப் பார்க்கத் தங்கள் கடிதம் எனக்கு