பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறப்புரை

101



பாளர்களும் வழிகாட்டிய பின்னும், இன்னும் அறநெறி அடைப்பட்டுத்தான் கிடக்கின்றது, இன்றைய உலகம், இயேசுவின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் காட்டினும், ஆபிரகாம், நபி நாயகம் ஆகியோர் வாழ்ந்த காலத்தைக்காட்டிலும், அப்பரும் மணி மொழியாரும் வாழ்ந்த அந்தக் காலத்தைக்காட்டிலும் ஒரு சிறிதும் முன்னேறவில்லை என்பது காந்தியடிகளாரது முடிவின் மூலம் நமக்கு நன்கு விளங்குகிறது. ஆம்! மனிதன் மிருக உணர்வினின்று விடுபட்டு, மனித உணர்வோடு வாழும் பண்பாடு இன்னும் அரும்பவில்லை தான். அந்நிலையில் உள்ளங்கள் திறப்ப தெங்கே? உறுதி தரும் அறநெறிப் பாதை திறப்ப தெங்கே?

அடைந்த அறவாழ்வு திறக்கப்பட வேண்டுவதேயாகும். அந்தத் திறவுகோலை என்றே நமக்கு வள்ளுவர் அளித்துள்ளார். அத்திறவுகோல் ஒவ்வொரு தமிழனிடத்திலும் இருக்கிறது. உலகில் வாழும் ஒவ்வொருவரிடமும் அத்திறவுகோல் இல்லாமல் இல்லை. ஒன்று திறக்க விருப்பமில்லாமையோ, அன்றித் திறந்தால் சுயநலம் பாழ்படும் என்ற கருத்தோதான், இது வரை அக்கோல் உபயோகிக்கப்படாததற்குக் காரணம். உலகப் பேரரசுகள் தொடங்கிச் சாதாரணத் தனி மனிதன் வாழ்க்கை வரையில் இவ்வுண்மை பொருந்தும். ஒவ்வொருவனும்-ஒவ்வொரு சமூகமும்- ஒவ்வொரு நாடும்-தானும் தாமும் மட்டும் வழவேண்டும் என்ற சுயநலத்தாலே தான் உள்ளங்கள் அடைப்பட்டுக் கிடக்கின்றன. எனினும், என்றேனும் ஒரு நாளில் உள்ளங்கள் திறக்கப்படத்தான் வேண்டும். அன்றேல், உலகம் ஒரு பெரிய சுடுகாடாக அன்றே மாறிவிடும்! இதை எண்ணிப்பார்க்க முடிகிறதா?

உள்ளங்கள் திறப்புற்று, உயிரினம் செழிப்புற்று வாழ வழி வகுத்த அறவோர்களில் தலை சிறந்தவர்