பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எது கலாசாரம்?



இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் கலாசாரச் சுதந்தர மாநாடு ஒன்று நடைபெற்றதை யாவரும் அறிவர். கலாசாரம் என்பது என்ன ? அதற்குச் சுதந்தரம் உண்டா இல்லையா ? என்பன போன்ற பல பொருள்கள் ஆய்ந்து பேசப்பட்டு விவாதிக்கவும்பட்டன. அம்மாநாட்டின் வரவேற்புத் தலைவர் அவர்கள் பண்டைத் தமிழர் கலாசாரத்தைத் தொட்டுக் காட்டி, “யாஇதும் ஊரே ; யாவரும் கேளிர்”, என்ற உண்மையை உணர்த்தினார்கள். திறந்து வைத்த முதன்மந்திரியார் அவர்கள் மன அடக்கமே கலாசார அடிப்படை என்பதைக் குறித்துக் காட்டினார்கள். தலைமை வகித்த வரும் பொறுமை, நல்லெண்ணம். அன்பு, உலகை உணர்ந்து உற்றுழி உதவுதல் ஆகியவற்றின் அடிப்படை யிலேதான் கலாசாரம் அரும்பும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இவர்களுடைய அருங்கருத்துக்கள் பொன்ன போலப் போற்றக் கூடியனவேயாம்.