பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மனிதன் எங்கே செல்கிறான்?



திருப்பர். படித்தாலும் ஏதோ என்று விட்டிருப்பர். படித்தும் அதில் கருத்தும் கவலையும் செலுத்தாதிருப்பர். எனக்கென்னவோ, அச்செய்தி படித்தது முதல் சிந்தை தடுமாறுகிறது; இதுவும் இந்த நூற்றாண்டின் இடைக்கால நாகரிகமா என்று கேட்கத் தோன்றகிறது. அச்செய்தி இதுதான்; நாகபுரியிலே இருந்து வந்தது. நம் பொன்னாட்டின் நடு நாட்டு நிகழ்ச்சி இது.

மத்திய நாட்டிலே ரைகார் ஜில்லா ஒரு பகுதி போலும். அங்கே வாழ்ந்த தேரா பெல்டார் என்பவருக்குப் பணம் தேவையாய் இருந்தது. அதற்காக, பிரேமியா பெல்டாரிடம் சென்று கடன் கேட்டார். அவர், 'அடகுப் போருள் இருந்தால் தான் கொடுப்பேன்' என்றாராம். பாவம் பணம் வேண்டியவர் ஏழை. அடகு வைக்கப் பொருளில்லை போலும்! அழகிய அவர் பெண் ஒருத்தி அருகிருந்தாள். அவளை அடகு வைத்து ரூ. 675 கடனாகப் பெற்றாராம். பணம் கொடுத்து, ஒரு நாள் குறித்து அந்நாளில் பணத்தைத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும், அன்று தாராவிடில் அடகுப் பொருள் -அப்பெண்-கடன் கொடுத்தவனுக்கு உரியவளாவாள் என்றும் முடிவு போலும்! பாவம்! பணம் வாங்கின வருக்குக் கொடுக்க வழியில்லை. பெண்ணை அக் கடன்காரருக்கு ஒப்படைக்க வேண்டும். இவர் ஒப்படைக்கும் வரையில் கடன்காரர் காத்திருக்கவில்லை. பணம் கொடுத்த அந்தப் பிரேமியர் பெல்டார் கடன்காரரைத் தேடி வந்து அப்பெண்ணை அனுப்புமாறு கேட்டார். அவர் கேட்டுத் தன்னைக் கொடுக்கும் வரையில் அப்பெண் அங்குக் காத்திருக்கவில்லை; மானம் தாளாது அருகிலே உள்ள ஆற்றில் வீழ்ந்து மடிந்தாள். அடகு ஏற்பாட்டின்படி கடன் கொடுத்தவருக்கு உரிய பொருள் போயிற்று, அவர் பொருள் இழந்து ஏமாந்தார்; இது தான் வெளி வந்த செய்தி. 'என்ன! இப்படியும் இருக்-