பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

மனிதன் எங்கே செல்கிறான்?



ஆட்சி மக்கள் ஆட்சியாய் அமைந்துள்ள காரணத்தால், மக்கள் மனப்போக்கின்படி அடிக்கடி ஆளும் கட்சியார் மாறிக்கொண்டே வருவார்கள். அறவழி தவறாது, ஆளவேண்டிய வழி பிழையாது, உற்றார் மற்றார்' என்ற வேறுபாடுகள் நோக்காது, ஒல்லும் வகை: யான் ஒழுக்க நெறி நின்று ஆளும் நல்லவர், நெடுங்காலம் நாடாள்வர். அல்லவர், அடிக்கடு மாறிக்கொண்டேயிருப்பர். ஆள் வருகின்றவர் தாம் ஆள உரிமை பெற்றவர் என்று எண்ணாது, 'மக்களுக்குக் கடமை யாற்றவே அரச பீடத்தே அமர்ந்தோம்,' என்று எண்ணி, தங்களை மக்கள் எசமானர்களாக எண்ணாது, மக்கள் ஊழியர்களாகக் கருதி ஆள வேண்டுவதே நல்ல ஆட்சி முறையாகும். அந்த ஆட்சி முறையிலும் ஆளுகின்ற மேற்பதவியிலுள்ள தலைவர்கள் சாதாரண மக்களோடு எப்போதும் தொடர்பு கொள்ள இயலாது. அவர்கள் சாதாரண மக்களோடு தொடர்பு கொள்ளும் வகையில், நடுவில் நின்று பணியாற்றுபவர்களே அரசாங்க ஊழியர் என்றும் மக்கள் ஊழியர் என்றும் (Govt. Servants: Public Servants) இன்று கூறப்படும் உத்தியோகத்தர்களாவர். அவர்கள் வழித்தான் மக்கள் நிலையை அரசாங்கம் அறிந்துகொள்ள முடியும். எனவே ஆளுகின்றவர் மன்னராயினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராயினும், அன்றி வேறு யாராயினும், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர் தம் தொடர்பின் வழி நாட்டின் நிலையை உணர்ந்து, அவர்கட்கு வேண்டிய ஆக்கப் பணி புரியும் நல்ல தொண்டை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்க ஊழியர்களுடையதேயாகும்.

இன்றைய மக்களாட்சி முறையில் யார் வேண்டுமானாலும் ஆள வரலாம். இன்றைக்கிருப்பார் நாளை பதவி விட்டு விலக்கப்படலாம். என்றும் அவர்கள்