பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பதற்கு முன்...

எனது கதாநாயகர்களைப் பற்றியும் கதாநாயகிகளைப் பற்றியும் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை’ என்று ஒரு பேச்சு"க்காகத் தான் சொல்கிறேன்; எத்தனை வார்த்தைகளில் முடியுமோ, அது எனக்குத் தெரியாது!

பொதுவாக ‘வில்லன்’ என்றால் - அதாவது தீயோன்’ என்றால், அவனை நாம் எவ்வாறு உருவகப்படுத்திப் பார்க்கிறோம்? - கலைந்த கிராப்புத் தலை; கனல் கக்கும் பார்வை; துடிக்கும் மீசை வெடிக்கும் சிரிப்பு: உதட்டில் புகையும் சிகரெட்; கழுத்தில் பறக்கும் கைக்குட்டை - இப்படியாகத்தானே?

இத்தகைய ‘பார்வைக்குக் காரணம் பெரும்பாலும் சினிமாக்காரர்கள் - தீயோனுக்கு அவர்கள் வகுத்து வைத்திருக்கும் இலக்கணம் அப்படி! ஆனால் வாழ்க்கையில்......

வகிடு கலையாமல் வாரி விடப்பட்ட கிராப்புத் தலை; வைதாரையும் வாழ வைப்பது போன்ற வசீகரப் பார்வை: தமிழ் என்ற மொழிப்பற்றும், தமிழன்’ என்ற இனப்பற்றும் மீசையிலாவது இருக்கட்டுமே என்பதற்காக வைத்துக் கொள்ளப்பட்ட மீசை எடுத்ததற்கெல்லாம் சிரித்து வைக்கும் ஐஸ் கிரீம் சிரிப்பு; உள்ளத்தோடு ஒட்டாமல் உறவாடும் உதடு; கழுத்தில் டை, கையில் திருக்குறள் - இப்படியும் இல்லையா, சில நல்லவர்கள் - அந்த வல்லவர்களில் ஒருவரைப் பற்றிய கதை இது!