பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாற்றலுக்குத் துவளாதான்

24–1–1989

வென்றவனை வெங்களத்தில் நின்றவனை

வேதனைகள் பலவும் ஏற்று நன்றெனவே சிரித்தவனை நாளெல்லாம் உழைத்தவனை நாட்டுக் காக என்றுளமே மகிழ்ந்தவனை என்மக்கள்

அரியணையில் ஏற்றி வைத்தார் நன்றியினை அவர்க்குரைப்பேன் நற்றமிழால்

வாழ்த்துரைப்பேன் நாடு வாழ

எனதுதமிழ்த் திருநாடே எனையின்ற

தாய்நாடே இதற்கு முன்னர் நினதுமனம் புண்ணாக நின்றவர்கள்

இன்றில்லை நீங்கி விட்டார்; முனமொருகால் ஆண்டவன்தான் முதலமைச்சாய்

மீண்டுமிங்கு முனைந்து வந்தான் மனமகிழத் தலைநிமிர்வாய் மனப்புண்ணை

ஆற்றிடுவான் மாதே வாழி

சுடுகணைகள் எத்தனைதான் சொரிந்தாலும்

துவண்டுவிடான் துணிந்து நிற்பான் விடுமுறைகள் அவற்கில்லை வேளை தொறும்

பணிபுரிவான் வெற்றி கொள்வான் நடுவுநிலை பிறழாதான் நாட்டுநலங்

கருதிடுவான் நன்றே செய்வான் தொடுவானச் செங்கதிராய்த் தோன்றிடுவான்

சுடரொளியைத் தொழுவோம் வாரீர்.