பக்கம்:மனிதர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霍集 விண்ணின் கருணை மழையாகப் ப்ொழிகிறது. மழை மண்ணின் தாகத்தைத் தணிக்கிறது. அச்செயலில் அது சேறாகிக் குழம்புவதை, களங்கப்படுவதை, பெரிதுபடுத்து வது கிடையாது. மீண்டும் அது புனிதமான ஆவியாக மாறி வானகம் சேர்கிறது. ஆத்மாவும் இப்படித்தான். மனிதர் உடலில் புகுந்து, உணர்ச்சிகளை திருப்திப்படுத்தக் கறைபட்ட போதிலும், களங்கமற்று உயர்வடைகிறது. -ஆறு ஓடிக் கொண்டேயிருக்கிறது. முடிவற்ற காலத் தின் சித்திரம் அது. வளர்ந்து வரும் உயிர்க் குலத்தின் பிரதி பலிப்பு அது. உணர்ச்சிகள் என்பது கரைகள் மாதிரி. அவை ஆற்றை பாதிக்க முயலுகின்றன. ஆனாலும் ஆறு தான் கரைகளை அரிக்கிறது. தன் போக்கில் ஒடுகிறது. -உணர்ச்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலமே, வாழ்க்கையின் நிறைவும், மரணத்தின் மீது ஆதிக்கமும் பெற முடியும். மரணத்தைக் கண்டு பயங்கொள்ளலாகாது, -கடமைகளைச் செய். பலனைக் கருதாதே. கீதையின் போதனையை மறக்கக்கூடாது. இவையும் இன்னும் பலவும் அறிவாளிகளின் பேச்சில் உருண்டு புரண்டன, மரணத்தை எண்ணி அஞ்சாமல், வாழ்க்கையை நன்றாகச் சுவைத்து, புலன்களின் வேட் கைக்கு நிறையத் தீனி கொடுத்து திருப்திப்படுத்துவதன் மூலமே, ஆத்மா பிறவிப் பயனை நுகர்ந்து, விண்ணின்பம் அடையும் என்ற கருத்து ஒவ்வொருவர் பேச்சிலும் அழுத்த மாக ஒலி செய்தது. இந்திரன், அருணகிரி, புத்தன், கண்ணன் போன்ற பெயர்கள் அதிகமாக அடிபட்டன.அங்கு கூடியிருந்தவர்களின் பெயர்கள்-முக்கியமாக அபிநவ ஜனகர், திருமலையப்பர் நாமம்-புகழ்ச்சியாக உச்சரிக்கப் பட்டன. மத்தியானம் வயிறார அருமையான சாப்பாடு: மாலையில் சிற்றுண்டி ஆகியவற்றுக்கும் குறைவு இல்லை. ஆகவே, எல்லோருக்கும் குதூகலமும் குஷியும்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/13&oldid=855487" இலிருந்து மீள்விக்கப்பட்டது