பக்கம்:மனிதர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#$ 9 மேலே நின்று வேடிக்கையாக எட்டிப் பார்த்து கால் வழுக்கி விழுந்தும், தற்கொலைத் திட்டத்தோடு செயல் புரிந்தும் பரலோக யாத்திரை மேற்கொண்டவர்களைப் பற்றி எப்பொழுதாவது அவ்வூரார் பரபரப்படைய வாய்ப்பு கிட்டு வது உண்டு. - அந்தப் பள்ளத்தில் சின்ன ஐயாவும் சீதை அம்மாளும் விழுந்து கிடந்ததைத் தற்செயலாகக் காண நேர்ந்த மாடு மேய்ப்பவன் எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லிய வாறே, பிள்ளைவாளிடம் வந்து சேர்ந்தான். விஷயமறிந்த பிள்ளையின் வாய் சொல்லிற்று. சவங்க எக்கேடும் கெடட்டும்’ என்று. எனினும், அவர் இதயம் பதைத்தது: உடல் படபடத்தது. வண்டியும் ஆட்களுமாக அவர் அங்கே போய்ச் சேர்ந்தார். பலரும் பலவிதமாய்ப் பேசாமல் இருப் பார்களா? பேசினார்கள், பேசினார்கள். ரயிலுக்குப் போகிற போக்கில், மழைக்கு ஒதுங்கிய போது இருட்டில் தடுமாறி, கால் வழுக்கி பள்ளத்தில் விழுந்திருக்கலாம் அவனும் அவளும் என்று ஒரு கட்சி. இரண்டு பேரும் பேசி மனப்பூர்வமாகவே விழுந்திருப்பார் கள் என்பது எதிர்கட்சி. நோக்கம் எதுவாக இருந்திருப்பினும், விளைவு எதிர் பாராததாக அமைந்து கிடந்தது. மகிழ்வண்ணநாதனோ, இதையோ உயிரற்ற கட்டையாய் மாறிவிடவில்லை. ஆனால்- - மாறி ஆடும் பெருமாள் பிள்ளையின் வயிற்றெரிச்ச லுக்கும் மன எரிச்சலுக்கும் வித்து இங்குதான் ஊன்றப் பட்டது சீதையின் முதுகெலும்பிலே பலமான அடி. மகிழ் வண்ணனின் கால்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இருவரையும் வீட்டுக்கு எடுத்து வந்து வைத்திய சி கிச்சைக்கு ஏற்பாடு செய்தார் பெருமாள் பிள்ளை. அவர் LD-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/71&oldid=855606" இலிருந்து மீள்விக்கப்பட்டது