பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
19
 

உன்னுடைய நோக்கம் சரிதான். குறிக்கோளும் முறையானது தான். ரசம்போலன கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துவிட்டு, விகாரமாயிருக்கிறது என்று நீயே உன் முகத்தை வெறுத் துக் கொண் டால் எப்படி? வாழ்க்கையில் தோற்றவர்களிடம் போய், உன் வினாக்களைத் தொடுத்திருக்கிறாய். அவர்கள் வாரிவழங்கி விட்டார்கள். அதுதான் உன் குழப்பத்திற்குக் காரணம். அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விட்டாய்.

முதலில் உன்கேள்வியைத் தொடங்கு! என்று கேட்பது போல வாசுவைப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார் உலகநாதர். அவர்கள் பேச்சு, களை கட்டிக்கொண்டது.

திருமணம் என்பது எதற்காக? வாசு தன்முதற் கேள்வியைக் கேட்டதும், உலநாதர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

அண்ணா! சாப்பாடு ஆறுகிறது! சீக்கிரம் சாப்பிட வாருங்கள் என்று வாசுவின் அம்மா வீட்டிற்குள் இருந்தவாறே குரல் கொடுத்தாள்.

'சாதத்தைச் சுடச்சுட சாப்பிட்டு விட்டு, மீந்ததை அப்புறம் தொடரலாமே' என்று கூறிவிட்டு வாசுவின் பதிலுக்குக் காத்திராமல் உலகநாதர் எழுந்தார். கிடைத்தற்கரிய விளக்கம் இப்பொழுது கிடைக்கப் போகிறது என்று மகிழும்போது, சாப்பாடு வந்து கெடுத்ததே என்று சங்கடப்பட்டாலும், நல்லகுருவை நயந்து பின்பற்றுகிற Pானவன் போல, தாய்மாமனைப் பின் தொடர்ந்தான் வாசு.

விரல்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டிருந்தாலும், சிவனது மனம் திருமணம் ஏன்? ஏன்? என்று வினாவுடன் சிலந்து கொண்டிருந்தது. நினைவுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. உலகநாதர் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்து சிரித்த வண்ணம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.