பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



யென்றாலும் அவர்களது பெற்றோள்கள் சுற்றத்தாள் அவசரப் படுத்திவிடுவார்கள். அவ்வாறு வருகின்ற வாய்ப்பை பொறுமையாக மணமகன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.

முதன்முதலாக திருமணத் தம்பதிகள் உடலுறவு கொள்வதைத்தான் முதலிரவு என்கிறோம். முதலிரவைப் பற்றி ஒரு அறிஞர் கூறுகின்றார் "உடலுறவின் மூலம் கன்னி ஒருத்தியைப் பெண்ணாக்கி விடும் அற்புதமான இரவே முதலிரவாகும்." என்கிறார். அந்த அற்புதத்தை நிகழ்த் தும் போது அவசரப் பட்டால் ... ஆக்கம் பொறுத்தவர்கள் கொஞ்சம் ஆறவும் பொறுக்கவேண்டும்! அதிலும் புதிதாக உறவு கொள்ள முயல்பவர்கள் எவ்வளவு நிதானம் காட்டவேண்டும் தெரியுமா?

திருமணத்திற்கு முன்னே, உடலுறவில் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அப்பொழுது நீங்கள் கூறுவது? புதியவர்களுக்குத்தான் அந்த முதலிரவு புனிதமான நாள். இல்லையேல் அது வெறும் சம்பிரதாய நாள்தான். ஏற்கனவே உடலுறவில் வேண்டிய அனுபவம் உள்ளவர்கள். திருமணம் செய்து கொள்வது வெறும் சம்பிரதாயத்திற்காக இருக் கலாம் . அல் லது வருமானம் சுலபமாக அனுபவிப்பதற்காக இருக்கலாம். அல்லது வருமானம் கருதியும் இருக்கலாம். பிறந்த அல்லது பிறக்கின்ற குழந்தைகள் நேரான வழியில் பிறந்தவை தான் என்று ஊருக்கும் உலகத்திற்கும் உணர்த்தும் நோக்கத்துடன் திருமணம் செய்துகொண்டதாகவும் இருக்கலாம்.

ஆனால் புதுமை மணம் வீசும் முதலிரவில்தான் ஓர் புத்துணர்ச்சி இருக்கும். அதில் மனச்சிலிர்ப்பு (Thrill) இருக்கும்.