பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை xiii

அவர் கடமை என்பதை மகளிர் உணர்ந்து அவர்களைப் பிரிந்து சிலகாலம் இருக்கும் துன்பத்தைப் பொறுத்தார் கள். எண்ணியபடி செய்யும் அணிவுடையவர்களே சிறந்த ஆடவர்கள் என்ற எண்ணம் இருந்தது. ஒருவரோடு நட் புப் பூண வேண்டுமானல் அவர் தகுதி முதலியவற்றை முன்பே ஆராய்ந்து, ஏற்புடையவரென்முல் நண்பு செய் வதும் இல்லையானல் செய்யாமல் இருப்பதும் பெரியோர் இயல்பு. ஒருமுறை நண்பராக்கிக் கொண்டால் பிறகு அவருடைய தகுதியை ஆராய்வது தவறு என்பது அவர் கள் கொள்கை.

இளம் பெண்கள் மணலில் விளையாடுவார்கள். கம் பலத்தை விரித்து அதன்மேல் பூந்தாடுவார்கள். இல்லத் தில் மகளிர் மாலேக் காலத்தில் விளக்கேற்றுவார்கள்; விடி யற்காலத்தில் தயிர் கடைவார்கள். காவிலே சிலம்ப்ை யும் உடம்பி. ல பொன்னலாகிய சேயிழைகளையும் அணி வார்கள். இயற்கை அழகைக் கண்டு இன்புறுவது சில மகளிர் இயல்பு.

மகளிருக்கு உயிரைவிடச் சிறந்தது நாணம். இளம் பெண்கள் தம்முடைய அன்னையாரிடத்திலும் ஆயத்தோரி டத்திலும் மிக்க அன்பு பூண்டிரு:பார்கள். இர்வில் தம் அன்னையின் அணேப்பிலே இன்புற்று உறங்குவார்கள். தாய் தன் பெண்ணை வாயிலே முத்தமிட்டுக் கொள்வ துண்டு.

பொன்னை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பார்கள். அந்த உரைக் கல்லுக்குக் கட்டளே என்று பெயர். தயிர்ப் பானையில் விளாம்பழத்தைப் போட்டு மூடிவைப்பர்ர்கள். அதல்ை அந்தப் பானையின் முடைநாற்றம் மாறும். யாழ் வாசித்து அந்த இசையிலே ஈடுபடும் வழக்கம் தமிழ் மக்களுக்கு உண்டு,

இந்த ஒன்பது பாடல்களிலே இத்தனை செய்திகளும் இன்னும் சில செய்திகளும் அமைந்திருக்கின்தின. நானுர்று பாடல் அடங்கிய நூற்றினையில் இன்னும் பல பல செய்தி கள் உண்டு. இப்படியே எட்டுத்தொகை நூல்களிலும்