பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேத முதல்வன்

இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லாப் பொரு ளாகவும் நிற்பவன். அவனுக்குள் எல்லாம் அடங்கி நிற்கின்றன. அவன் எல்லாவற்றிலும் கரந்து நிறைந்து நிற்கிருன். பூவில் மணம் போலவும் எள்ளுள் எண்ணெய் போலவும் நெருப்பில் வெப்பம் போலவும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகிருன் என்று நூல்கள் கூறும். வேதங்கள் எல்லாம் அக் கடவுளைத் துதிக் கின்றன. அந்த வேதத்தை உலகத்துக்குத் தந்த முதல்வன் அவன்தான்.

அவனுடைய தத்துவத்தையும் பெருமையையும் உலகம் உணர்வது எளிதன்று. உணர்ந்தாலன்றி அவனை அணுகி அருள்பெற்று இன்பமடையும் நெறி உலகத்தில் உள்ள உயிர்களுக்குப் புலப்படாது. சூரியன் தன்சீனக் காட்டித் தன் ஒளியால் உலகத்தையும் காட்டுகிருன். கடவுள் தன்னை நேரே காட்டுவதில்லை. தன் உண்மையை அறிவுடையோர் உணரும் வண்ணம் அருள் நூலைக் காட்டினன். அதைத் தான் வேதம் என்று சொல்வார்கள். அறிய வேண்டியவற்றை அறியும் படி தன்னை ஒதுவாருக்கு உதவியாக இருப்பதளுல் வேதம் என்ற பெயர் அதற்கு அமைந்தது.

அவனுடைய உருவம் எது? நமக்கு ஆதாரமாக இருக் கின்ற எல்லாம் அவனுடைய உருவமே. அவன் உருவத் துக்கு அளவு எது? நாம் எவற்றை மிக மிகப் பெரிய அளவுள்ளனவாக நினைக்கிருேமோ அவைகளெல்லாம் அவனுடைய திருமேனியின் அளவை அறிய ஒருவாறு பயன்படும். இந்த நிலம் விரித்தது; மிக மிகப் பரந்தது.