பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மண் விளக்கு

தோழி : நன்ருகச் சொண்ளுய்! அது அவனுடைய நாட் டின் இயல்புக்கு ஏற்றதே. கொடிச்சி காக்கும் அடுக் கற் பைந்தினையின் முந்து விளைந்த பெருங் கதிரை, அங்கே மந்தி கல்லாக் கடுவளுேடு கொண்டு, நல் வரை ஏறி, அங்கை கிறைய ஞெமிடிக்கொண்டு தன்னுடைய திரைந்த தாடையிலும் வளைந்த கவுளிலும் நிறையும் படி மொக்குகிறது; இங்கோ தாயும் தமையன்மாரும் பிறரும் காத்து ஒம்பும் நின் பெண்மை நலத்தைத் தலைவன் வந்து வெளவிஞன். ஆனல் குரங்கு நல்வரை ஏறி உண்ணுவது போல, தன் ஊருக்கு உன்னை அழைத்துச் சென்று உலகினர் அறியக் கணவன் மனேவியாக வாழும் நிலை வரவில்லை. அதுவும் வந்து விடும் என்றே நம்புகிறேன்.

தலைவி வருமா, தோழி? அந்தக் காலம் வருமா? என்

காதலர் என்னை வரைந்துகொள்வாரா?

தோழி : மட நங்கையே, இனி உன் கவலையெல்லாம்

ஒழிந்தது. அவன் வந்தனன்.

தலைவி : யார்? தோழி : உன் உயிர்க் காதலளுகிய மலைநாடன்தான். உன்னை மணந்துகொள்ள வேண்டுமென்று உறுதி செய்து முதியவர்களை முன்னிட்டுக் கொண்டு வந்து விட்டான்.

தலைவி : என் காதலரா?

தோழி: ஆம்; தினைக் கதிரைப் பறித்து வரையின் மேல் ஏறிக் கை நிறையத் தேய்த்து, நோன்புடைய சந் நியாசிகள் கையூண் நுகர்வது போலே மந்திஉண்ணும் நாடன் வந்தான். நீ இனிக் கவ்ல்ஸ்ய ஒழி: