பக்கம்:மனோகரா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 129

H. :

i_f å

ւ :

is 3.

H

ч г

வேண்டியது. பத்மாவதி, கடைசியில் நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமோ? என்மீது கோபங் கொள்ள லாகாது. .

கேளும்.

சில தினங்களுக்கு முன் சத்தியசீலருக்கு நீ ஒரு நிருபம் எழுதியது உண்மைதானா ?

ஆம்.

என்ன எழுதினை ?

மனோஹரனை வசந்தசேனை துாற்றிய பொழுது அ வ ரு ம் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தன ராதலின், நீர் இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண் டிருக்கலாமா? அப்படிப் பொறுத்துக்கொண்டிருந்த தற்குக் காரணத்தை உடனே அறிய விரும்புகிறேன், என்று கேட்டிருந்தேன்.

என்ன!-எனக்கு நீ ஒரு நிருபம் எழுதியதுண்மைதானா?

ஆம், அன்றைத்தினமே உமக்கும் ஒன்று எழுதினேன்.

அதில் என்ன எழுதினை ?

ஏன்? அதில் என்ன தவறிருந்தது?-பிராணநாதர் என்று உம்மை அதில் நான் அழைத்தது தவறென்கிறீர் களோ? இப்பதினாறு வருடங்களாகப் பார்க்கமாட்டே னென்றவள், பிராணநாதா என்று நம்மை எவ்வண்ணம் அழைக்கிறாளென உமக்கு ஆச்சரியமாருந்ததோ? எது எப்படியிருந்தபோதிலும் ஏன் தங்களைப் பிராணநாதா என்று அழைக்கலாகாது என்று ஆதிலேயே கேட்டிருந் தேனே, மறந்தீரோ ?

ஒஹோ!-பத்மாவதி, இன்னும் என்ன எழுதினை, நன்றாய் ஞாபகப்படுத்திச் சொல்.

அதையேன் கேட்கிறீர் ?

சொல் , சொல்கிறேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/138&oldid=613568" இலிருந்து மீள்விக்கப்பட்டது