16 (ராஜா கமலாவதியை அறைகிறார்.) கன்னத்தில் கமலா : மகாராஜா! தர்க்க நியாய வாதங்களுக்குப் புறம் பாக தான்தோன்றி முறையில் பேசி அகாரணமாக என்னை அடித்து புண்படுத்திவிட்ட உங்களை நான் இனிப்பார்க்கத் தயாராக இல்லை. உங்களைக் காணவும் என் கண் கூசுகிறது. வேசி தேவசேனையின் நேசத் தின் வேகம் தணிந்தபின் தாங்களாக வந்து என்னைப் பார்த்தாலொழிய நானாக வந்து தங்களை பார்க்க மாட்டேன் என்பதையும் நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மகாராணி கமலாவதிக்கு உங்கள் புதிய ரதிதேவியின் அழகில்லாமலிருக்கலா
ாம். ஆனால் அவளின் இந்த மஞ்சள் கயிற்றுக்கு ஒரு தனி மகிமை உண்டென்பதைமட்டும் உணரும் காலம் உங்கள் வாழ்க்கையிலே ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். போய்வாருங்கள், உங்கள் புண்ணிய சேவைக்கு! போங்கள். ராஜா: நீ சொல்லவேண்டாம்! நானே போய்க்கொண்டு தான் இருக்கிறேன். தேவசேனா தோழியிடம். சேனா: இந்தப் புள்ளிதான் அடையாளம்... இதில் போடு விஷத்தை. பத்ரம் ..... · நாடகம் பார்க்கும் வசந்தசேனா: மகாரரஜா! இனிமேல் உள்ளம் கொதிக்கிறது. என்னால் இருக்கமுடியாது... நாடக தேவசேனா: அத்தான்... சூடான பால். தலைவலி பறந்துவிடும்...... வர்மன்: சேனா காமக் கள்ளிகள் தங்கள் கணவன்மார் களுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுப்பார்களாம். நீ கேள்விப்பட்டிருக்கிறாயோ...... சேனா : இல்லையத்தான்... ஆனால் இந்தப் பாலில் அப்படி யொன்றுமில்லை ......