35 மனோ : வசந்தசேனை ... வட்டமிடும் கழுகு!... வாய் பிளந்து நிற்கும் ஓநாய்! நம்மை வளைத்துவிட்ட மலைப்பாம்பு அவளுக்கு இரக்கம் -??? முடியாது! கூடாது!... பத்மா: உன்னிஷ்டம்... ஊரார் நகைக்கட்டும் தாய் சொற் கேளாத் தனயனென்று!..நாடு சிரிக்கட்டும் - அடங் காத மகனைப்பெற்ற அன்னையென்று! மனோ: அய்யோ அப்படியொன்றுமில்லையம்மா இதோ ஆணையிட்டு விடுகிறேன். பத்மா: செல்வா!
(வசந்தசேனை அந்தப்புரம்.) வசந்தா பௌத்தாயனன் ஒருகுட்டிச்சுவரு !... கோழைப் நிச்சயம் காட்டிக்கொடுத்து பயல் !... என்னை விடு வான் நான் தப்ப வேண்டுமானால் அவன் உயிரோடு இருக்கக்கூடாது. தோழி: பாவம் பௌத்தாயனன்! வசந்:தா: ஹூம் தேனை எடுக்க வேண்டுமானால் பல தேனீக்களை கொன்றுதான் நான் சொன்னதை ஏற்பாடு செய் !
ஆகவேண்டும்...சரி (சிறைச்சாலை வசந்தசேனாவின் தோழி கையிலே ஒரு கலயத்தோடு ரகசியமாக சிறைக்காவலாளியோடு பேசுகிறாள், பின்னர் காவலாளி அந்தக் கலயத்தை எடுத்துச் சென்று பௌத்தாயன் னிடம் கொடுக்கிறான்.) பௌத்தாயன் : கொடுக்கிற தெய்வம் கூறையை பிச்சுக் கிட்டு கொடுக்கும்!
வாழ்க வசந்தசேனை ! என்று மூட்டையை அவிழ்க்க, பட மெடுத்தபடி பாம்பு வெளிவந்து கடித்து விடுகிறது... பௌத்தாயனன் சாகிறான்