நாடகக் கதை வீரன், மனோகரன் குலகுரு நிர்ணயித்த லக்னத்திலே பாண் டிய நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டு தாய் பத்மாவதி வீடமும், மனைவி விஜயா விடமும் விடை பெறுகிறான். அவன் தந் தையை வசப்படுத்தியுள்ள வசந்தசேனை, போரில் மனோகரன் இறந்து விட்டான் என்று பத்மாவிடம் ஒரு செய்தியைச் சொல்லி அவள் உயிரைப் போக்கிவிட்டால், தானே மகாராணியாகி விட லாம் எனக் கருதி பௌத்தாயகன் என்பவனை அதற்கு ஏற்பாடு செய்கிறாள். பௌத்தாயனன் பத்மாவதியிடம் மனோகரன் இறந்து விட்டதாகச் சொல்லும்போது மனோகரன் வந்து விடு கிறான். பௌத்தாயனன் மன்னிக்கப்படுகிறான். வசந்தசேனை யின் சூழ்ச்சியைக் கண்டு ஆத்திரமடைந்த மனோகரனை தாய் பத்மாவதி தடுக்கிறாள்.மனோகரனை இளவரசனாக்க அரசர் தீர்மானிக்கிறார். அன்றைய தினம் கொலுமண்டபத்துக்கு வந்த ராஜகுரு, அரசன் பக்கத்தில் வசந்தசேனை இருப்பதைக் கண்டு ஆத்திரமடைகிறார். மனோகரனும் சீறிப் பாய்கிறான். தாயின் சத்யத்தால் அமைதி அடைகிறான். வசந்த விழாவில் வசந்தசேனை மனோகரனை வேசி மகன் என்கிறாள். அரசருக்கே வசந்தா மீது கோபம் வருகிறது. வசந்த விழா சம்பவம் பற்றி கேட்டு பத்மாவதி, சத்யசீலர் எனும் அமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறாள். அந்த கடிதத்தை மாற்றி அரசர் மனதை வசந்த சேனை குழப்பி விடுகிறாள். அரசருக்கு பத்மாவதி மீது சந்தேகம் பிறந்து, சத்யசீலரை வீட்டே மனோகரனை கொல்ல ஆணையிடு கிறார். சத்யசீலர் தவித்தினர். மனோகரன் காரணம் கேட்க சபைக்கு போகிறான் அவனை சங்கிலியால் கட்டிவர மன்னர் உத்திரவிடுகிறார், சடையில் நடந்த வாக்குவாதத்தில் மனோகரன் தந்தையைக் கொல்லப் பாயும்போது பத்மாவதி ஓடிவந்து தடுத்து விடுகிறான். மனோகரனை கொல்வதற்கு கொண்டு செல் கிறார்கள்.
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/4
Appearance