45 வ.சே: என்னை விட்டுவிடுங்கள் மகாராஜா LOTSDT முகப்பிலே ஒரு வேண்டுகோள். தயவு செய்து நிறை வேற்றுங்கள். தற்கொலை செய்துகொண்டாள் வசந்தா என்ற அவச்சொல் தங்களுக்கு வேண்டாம். தாங்களே கொன்று விடுங்கள் - இதோ (கட்டாரி யைக் காண்பிக்கிறான்). தங்கள் நினைவுகளை ஏந்திக் கொண்டிருக்கும் என் நெஞ்சிலே இதைப் பாய்ச்சுங் கள். இதைக் கத்திக் குத்தாகக் கருதமாட்டேன். என் கண்ணாளன் தந்த கடைசி முத்தமாகக் கருது வேன்.உம் தயங்காதீர்கள் - ஏன் ஸ்வாமி தயக்கம்.. அர: வசந்தி உனக்கு என்ன புத்தி மாறாட்டமா? வ.சே: உங்கள் அன்பை இழந்த பிறகு நான் யாருக்காக வாழ வேண்டும்?
அர : வசந்தீ... ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன்... தோழி: நல்ல கோபம்.. கொஞ்சம் தாமதித்திருந்தால் இந்நேரம் கொலை விழுந்திருக்கும்.. ஏமாற்றி வாழ் பவர்கள் எல்லாம் இன்ப லோகம் போக வேண்டும்... நீங்கள் எமலோகம் போகவேண்டும்.நல்ல நியாயம் அம்மா இது.. வ, சே : சீ..என்னடி தத்துவார்த்தம் பேசுகிறாய்... மகாராஜா விடம் பேசுகிறோம் என்ற மரியாதை ட இல்லாமல், தோழி: மனங் கொதிக்குதம்மா ... மகாராணியும்... அர: என்ன வ. சே: வாயை மூடுபோ இதைவிட்டு தோ: என்னை அடியுங்கள்...கொல்லுங்கள் கவலையில்லை என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளிவரத்தான் போகிறது... பல நாள் திருடன் ஒரு நாள் வ. சே: மாலினி...நீ போகமாட்டாய்...... தாழி முடியாது... வந்து பாருங்கள், மகாராணி அந்தப் புரத்தை ! அர்த்தராத்திரியில் அங்கே சத்யசீலருக்கு என்ன வேலை... வ.சே: அய்யோ! அய்யோ?... அரசர் : ஆ!.......அப்படியா.. உண்மையாகவா?... (ஓடுகிறார். வசந்தி, தோழி சிரிப்பு)