10 னாகரா திரைக்கதை வசனம்
(குகை உட்புறம் அருபம் ஒரு சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறது எதிரே புன்னகையுடன்.) பெரியவர் : வெற்றி... வேதனையைப் அதன் பொருட்படுத்தாத வனுக்குக் கிடைத்த வெகுமானம்!... அநேக வருஷங்க ளாக பட்ட பாட்டிற்கு சரியான அறுவடை! இனி நினைத்ததை யெல்லாம் செய்து முடிப்பேன்... கேசரி வர்மா! கவலைகள் படிந்த உன் கண்களிலே களிப்பு பொங்கட்டும். துயர மேகங்கள் உன்னை விட்டுத் தூர ஓடட்டும். தொல்லைகள், இனி நமக்குத் தூசுகள். ... an... app; Coop; வெற்றி; வெற்றி; ஹ கேசரி வர்மன் குரல்மட்டும் கேட்கிறது. சிற்றுளியும் சுத்தியும் தங்கள் வேலையை நடத்திக்கொண்டே யிருக்கின்றன. கேசரி வர்மன்; குருதேவார் உண்மைதானா? தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு!
நான் பெரி: ஆமாம் கேசரி வர்மா ! அரூபமாகிவிட்டாய். கண்டு பிடித்த மருந்து வேலை செய்யத் துவங்கிவிட்டது. கிடைக்காதது கிடைத்துவிட்டது. என் ஆராய்ச் சிக்கு அமோக வெற்றி. எல்லோரையும் நீ பார்க்க லாம். ஆனால் உன்னை யாரும் பார்க்க முடியாது. கேசரி: குருதேவா!... பதின்மூன்று வருடங்கள்... பதறிக் கிடந்தேன் அந்தப் பாவியைப் பழிவாங்க வேண்டு மென்று! பாதை வகுத்துக் கொடுத்து விட்டீர்க