8 வசந்தசேனை : பைத்யக்காரி! இப்போது நினைத்தாலும் நான் பட்டமகிஷி,ஆக முடியுமடி ! ...... தோழி: அதுதாம்மா எனக்கும் ஆசை. ஆனால் மகா ராணியும், இளவரசரும் உயிரோடு இருக்கும்போது ச - - R மகாராணி -இளவரசர்... இரண்டும் உயிர்ப்பிணங்கள் நான் சிரித்தால் போதும், சிம்மாசனமே கிடைக்கும். மயக்குகின்ற ஒரு பார்வை - இந்த மண்டலமே என் காலடியில்! மகாராஜாவின் பிரேமை ராணியடி நான் ! நினைத்தால் போதும் - வசந்த சேனை ராணி! அவள் மகன் வசந்தன் இளவரசன்!
மாளிகையின் ஒரு பகுதியில் வசந்தன் : ஆமாமாம் சந்தேகமில்லை விகடா! ராஜா மகன் இளவரசன் ! இதிலே எனக்கு சந்தேகமில்லை ... விகடன்: வசந்தா ! இதிலே மட்டுமா நமக்கு சந்தேக மில்லை...எந்த நாளிலும் எதிலும் நமக்கு எள்ளளவாகி லும் உள்ளபடிக்கு ஒரு சந்தேகமில்லை. (வசந்தன்; விகடன் சந்தேகமில்லை பாட்டு)
அரண்மனையின் மற்றொரு புறத்தில் பத்மாவதி; (அரசர் படத்துக்கு முன்பு) சுவார! நாமிருவரும் இனிமேல் ஒன்று சேரும் நாளே வராதா என் வாழ்க்கையிலே நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாதே! என் வாழ்க்கை யைக் கெடுத்த வசந்த சேனையைக்கூட மன்னித்து இருக்கிறேன்... அவளிடம் வாஞ்சை மிகுந்த உங்க ளுக்கு வகுத்தம் வரக்கூடாது என்பதற்காக!.. அப் படியே நான் யாருக்காவது தீமை செய்திருந்தாலும் அதற்கு பல ஆண்டு காலம் தங்களைப் பிரிந்து வாடு கிறேனே ! இந்த தண்டனை போதாதா? சுவாமி கண் மணி மனோகரனின் பிறந்த நாளும் வருகிறது. எழில் பூத்த நம் செல்வத்தை இருவரும் உச்சி மோந்து அன்பு வாழ்த்து கூறுவோமே - அந்த இன்ப நாள் - இனிமேல் வரவே முடியாதா சுவாமி!