பக்கம்:மனோன்மணீயம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சிவகாமி சரிதம் மனேன்மணிய நாடகத்தில் மறக்கமுடியாத முக்கிய மான பகுதி சிவகாமி சரிதமாகும். சிலப்பதிகாரத்தில் அமைந்: துள்ள கானல் வரி போன்று சுவையான பாடல்களைக் கொண்ட பகுதி இதுவேயாம். இப்பகுதி அமைந்துள்ள இடமும் மிகவும் சிறப்பான-பொருத்தமான இடமாகும். நாடகத் தொடக்கத்தில் நாம் மனோன்மணியையும் அவள் தோழி வாணியையும் சந்திக்கும்பொழுது காதலைப்பற்றி அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டவர்களாய் இருக் கிறார்கள். 'அரிவையர் நிறையழி காதல் நேரும் தன்மை. யைத் தெளிவாக எடுத்துரைத்து, தாமே துறக்கினும் மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை' என்று வாணி காதலைப் பற்றி உறுதியுடன் மொழிகிறாள். மாறாக மனோன்மணியோவெனில் பூவையர் காதல் இதுவே. யாமெனில் இகழ்தற் பாற்றே" என்கிறாள்: ‘காதல் என்பது. பேயோ பூதமோ என்றும் கேட்கிறாள்;என் கருத்து உண்மை யில் வனத்தில் எய்தி வற்கலை புனைந்து மனத்தையடக்கி மாதவம் செயற்கே அவாவுகின்றது என்றும் குடுப்பிடுகின் றாள். மேலும் வாணி பலதேவனை மணப்பதால் ஏற்படும் பழுதென்னை என்றும் கூறிக் காதலின் தன்மையை-பெற். றியை முற்றிலும் உணராதவளாயிருக்கிறாள். ஆனால் அன்றிரவே மனோன்மணி காதல் வயப்படு: கிறாள். சேரநாட்டு வேந்தன் புருடோத்தமனைக் கனவில் கண்ட அன்றிலிருந்து கருத்தழிகிறாள். மட்டளவின்றிக் காதல் கதுவுங்காலைஒதுவை நீயே உறும தன்சுவையே என்று வாணி அவளிடம் கூறியதற்கேற்ப, காதல் அவளை வந்து பற்றிய அளவில் படாதபாடு படுகிறாள். நண்ப! என்னுயிரி நாத என்று புலம்புகிறாள். மேலும் கண்டது கனவெனில் கனவும் அன்று, மற்று தனவெனில் நனவும். அன்று" என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/254&oldid=856401" இலிருந்து மீள்விக்கப்பட்டது