பக்கம்:மனோன்மணீயம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மனோன்மணியம் வேறோர் ஏதும் இல்லை. இனி யான் உயிர் வாழ்வதில் பொருளில்லை; இவ்வடிவே இனி எனக்குப் புகலிடம்' என்று கூறிக் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் பாய்ந்து -உயிர்விட முயன்றாள். இவ்வாறு இளமங்கை இசைத்த மொழிகள் முழுவதும் முனிவன் செவியிற் புகு முன்னரே அவர் மூதுருவம் விலகியது. கவின்மிகு காளையாகத் தோற்றம் தந்தது. முகம் மலர்ந்து, மொழி குளறி, சிவகாமி யானுனது சிதம்பரனே" என்று செப்பு முனம், இருவரும் மற்றோ ருருவம் ஆனார்கள். எவர்தாம் முன் அணைந்தனர் என்று இதுகாறும் அறிய முடியவில்லை. இருவரும் ஒன்றாயினர் என்று அறைகிறது சுருதி. அதுபோது மலைமகளும் அலை கலைமகளும் பரிந்து வந்து யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த, அருந்ததியும், இஃது எவர்க்கும் கிடைத்தற்கரிய பெருநிலை!" என்று வாழ்த்தினர். இக்கதையினை, உறக்கம் கொள்ளாமல் நடுயாமத்தில் துயருறும் மனோன்மணியின் மனக்கவலை மாற்ற, வானினையும், உயிரினையும் உருக்கும் வண்ணம் கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கு பண்ணியல் வாணி, தேனி இணும் இனியவாய்ச் சேர்ந்தொரு குரலில் வீணையின் இசை யுடன் விளங்கப் பாடினாள். இவ்வுலக உயிர்களாகிய ஆன்மாக்கள் அரும்பொருளர்ம் பரம்பொருளை-பதியை அடையும் மார்க்கத்தினைதத் துவ நெறியினை விளக்கும் கதையே சிவகாமி சரிதை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/262&oldid=856419" இலிருந்து மீள்விக்கப்பட்டது