பக்கம்:மனோன்மணீயம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மவணுகி 267 இவ்வாறு இருவரும் பாடிவரும் பொழுது வாணி நடராச _ளின் பெயரைப் பாட்டிடையே கூறிப் பெருமூச்செறிகிறாள். இது கேட்ட மனோன்மணி நகைச் சுவை மிளிரப் பின்வரு மாறு குறிப்பிடுகின்றாள்: ஏதடி வாணி ஒதிய பாட்டில் ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து கன்று! கன்று! கின் காணம் மன்றலும் ஆனது போலும் வார்குழலே! இக்கூற்றிலிருந்து மனோன்மணியின் நகைச்சுவை உணர்வினை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் வாணி யின்பால் பேரன்பு பூண்டவள் மனோன்மணி என்பதும் நமக்கு விளங்குகின்றது. வாணியை மனோன்மணி விளிக்கும் போதெல்லாம் புகழ்ச்சியுரை புகலுகின்றாள். சான்றாக, 'பிறைபழி துதலாய்', 'எட்பூ ஏசிய நாசியாய்', 'முல்லையும் முகையும் முருக்கின் இதழும் காட்டும் கைரவ வாயாய்", 'வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்', 'கண்டோ எனு மொழிக் காரிகை யணங்கே’, 'காந்தள் காட்டும் கையாய்', மின்புரை இடையாய்', 'அனிச்சமும் நெரிஞ்சிலா அஞ்சிய அடியாய் என்று வாணி யைக் குறிப்பிடும் மனோன்மணியின் சொற்கள், தான் ஒர் அரச குமாரியாயிருப்பினும், தனக்குத் தாழ்ந்த வாணி யிடத்துப் பேசும் பொழுதும் அவள் காட்டும் பண்பினையும் பரிவினையும் புலப்படுத்துவதோடு, அவளுடைய பேச்சு நயத்தினையும் தெளிவாக்குகின்றது. காதலைப் பற்றிச் சிறப்பித்துப் பேசும் வாணியின் கூற்றுக்கு எதிராகப் பூவையர் காதல் இதுவே யாமெனில் இகழ்தற்பாற்றே என்று காதலைக் கடிந்துரைக்கின்றாள் மனோன்மணி காதல் கொள்ளுதற்கு ஏதும் இல்லையாம்' என்ற கூற்றை எள்ளி நகையாடுகின்றாள்; தான் அறியாப் பேயாட்டந்தானாம்" என்று இடித்துரைக்கின்றாள். அதே நேரத்தில் தன் மனம் துறவுநெறியில் செல்ல எண்ணுகிறது என்பதனையும் எடுத்து மொழிகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/269&oldid=856433" இலிருந்து மீள்விக்கப்பட்டது