பக்கம்:மனோன்மணீயம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன் 283 _ன்னிற்பவை கெய்வை" என்றும், குடிலனை அறியாரி யாசி இக்கொற்றவை" என்றும், யார்வையார் அவனிடத் தாரா _ாவம்' என்றும் பலவாறு குடிலனைப் பலப்படியாகப் என விடங்களில் புகழ்ந்து பேசுகிறான். மேலும், உண்மைக்கு உறைவிடம் திண்மைக் கணிகலம் சத்திய வித்து பத்திஉன் மத்தன் ஆள்வினை தனக்காள் கேள்விதன் கேள்வன் அன்றும் புகழ்ந்து பேசுகிறான். எங்கேகினும் நம் காரிய மெயவர் கருத்தெப் பொழுதும்' என்றும், "தற் புகழ் கேட்க அற்பமும் இசையான் என்றும், நானே அவனிங் கவனே யானும் என்று ஜீவகன் கூறும் குடில புராணம், ஜீவகனின் காங்கம் காணமுடியாத வெள்ளை உள்ளத்தைக் கள்ளமின்றிக் கூறும். - ஜீவக மன்னனின் இந்த இரங்கத்தக்க நிலையினையே நாராயணன் பின்வருமாறு தெளிவுப்படப் பேசுகின்றான். வெளுத்த வெல்லாம் பாலெனும் மெய்ம்மை உளத்தான் களங்கம் ஒரான் குடிலனோ சூதே உருவாய்த் தோன்றினன் என்று முரண்பட்ட இரு பாத்திரங்களைப் பற்றிய தெளி அரையினை விளக்கி நிற்கிறான் நாராயண்ன். அரசத் துரோக நிகழ்ச்சியில் ஈடுபட்டு அதன் விளை வாகப் புருடோத்தமனால் கைது செய்யப்பட்டுச் சுருங்கை வழி அழைத்து வரப்படும் நிலையிலும், ஜீவகன், குடிலன் அந்த இரவிலும் தனக்காகவே எங்கோ உழைத்துக் கொண் டிருப்பதாகச் சொல்கிறான். இதனை மறைந்திருந்து கேட்கும் புருடோத்தமன், எத்தனை களங்கமில் சுத்தன் கஷ்டம்" என்கிறான். புருடோத்தமனிடத்திலிருந்து ஜீவகனி டத்துத் துது வந்த தூதுவனும் ஜீவகனின் இந்நிலையினை, என்மதி குறித்தாய் எடுத்தகைப் பிள்ளாய்?" என்று இடித் துக் காட்டுகின்றான். -- போர் வந்துவிட்டது. இரு படைகளும் கலக்கின்றன, போரில் ஜீவகனுக்கு ஏதம் வருமோ என உண்மைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/285&oldid=856470" இலிருந்து மீள்விக்கப்பட்டது