பக்கம்:மனோன்மணீயம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜீவகன் 285 இதே போன்றே முனிவரோடு மனோன்மணியை நடுநிகி பில் தனியே அனுப்பக் கூடாது என்று கூறி, முனிவரே பாயினும் அதியரே. உலகம் பைத்தியம், பழித்திடும்: சத்தியம் உணராது" என்றான். மன்னனும் மதிமந்திரியின் மாற்று யோசனைக்கு ஒப்புக் கொள்கிறான். வஞ்சி நாட்டிற்குத் துரது செல்ல நடராசனே பொருத்தமானவன்" என்று சுந்தர முனிவர் சொல்லியிருக்கவும், ஜீவகன் பலதேவனே துரதிற்குப் பொருத்தமானவன் என்ற குடின்ை கற்றையே ஒப்புக் கொண்டு செய்ல்படுகின்றான். இந்தப் பெருங்குறை ஜீவகன்பால் இருப்பினும், தவ முனிவரிடத்து மதிப்பும் பணிவும் கொண்டவனாகவே ஜீவகன் விளங்குகிறான். முனிவரை வரவேற்கும்போது, வருக! வருக! குருகிரு பாகிதே! திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலகன் னிழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஒதுவன்? என்றும், எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம் அத்த! கின் அருள்போல் அரனெது? என்றும், அவன் கூறும் கூற்றுக்கள் மெய்யாகவே அவன் அடி. மனத்தின் ஆழத்திலிருந்து வருவனவாகும். அடுத்து, ஜீவகன் மனோன்மணியிடத்தக் கொண்டிகுக் கும் அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை. தடை இல்லை செவிலித் தாய் கொலுமண்டபம் வந்து, ஜீவகனிடம் மனோன்மணியின் துயர நிலையைச் சொல்லத் தொடங்கள் நேற்றிரா முதலா' என மொழியுமளவில், பிணியோ என் கண்மணிக்கு?’ என்று பதைத்துக் கேட்கின்றான்; உரை பாய் விரைவில், ஒளிக்கலை ஒன்றும் என்கிறான். மனோன் மணியின்பாற் புதிதாகப் பிறந்துள்ள காதல் மெய்ப்பாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/287&oldid=856474" இலிருந்து மீள்விக்கப்பட்டது