பக்கம்:மனோன்மணீயம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மனோன்மணியம் அவனை ஒடிப் பிடித்து ஒறுக்க எண்ணியது உள்ளம்: தீண்டியடிக்கக் கை நீள்கிறது. ஆயினும், கினைக்கலை தீயனை கினைப்பதும் தீதே சினக்கணலே எழும்பும் நமக்கேன் அச்சினம் என்று எண்ணி, அமைதியில் ஆழ்கிறது அவன் உள்ளம். வெகுளியும் விடுத்துக் குணமெனும் குன்றேறி நிற்கும் நிலைஅன்பின் ஆற்றல் காணும் நிலை இதுவே. ஆனால் நடராசனைப் பற்றி வாணியின் தந்தை சகடர் எண்ணும் எண்ணமே வேறு. பணத்தாசை பிடித்த அப் பாழ் மனம், தனியே யுரைப்பன் தனியே சிரிப்பன் எங்கேனு மொரு பூ இலைகளிை அகப்படில் அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன் பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம் என்று ஜீவகனிடத்தில் நடராசனைப் பற்றிப் பேசச் செய் கிறது. ஆயினும் சகடரின் இக்கூற்றே நடராசன் பால் நமக்கு நல்லெண்ணத்தினை வளர்க்கின்றது. குடிலன் "அழகன்' என நடராசனைப் புகழ்வது போல் பேசுகின்றான். ஆனால் அரசனோ, "அழகிருந் தென்பயன்: தொழிலெலாம் அழிவே என்று நடராசனை வெறுத்து மொழிகிறான். மங்கையர் மனத் தினை வாங்கும் தடந் தோளனாகப் படைவீரர் நடராசனைக் குறிக்கின்றனர். "அரிவையர் யாரே வெறிகொளார் காணில்" என்கின்றனர் அவர்கள். அடுத்து நடராசன் நாங்கூழ்ப் புழுவினைப் பார்த்து, எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை விடுத்தனை இதற்கா எடுத்தனை யாக்கை என்றும், உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும் உழைப்போர்க் கெல்லாம் விழுமிய வேந்து ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/308&oldid=856529" இலிருந்து மீள்விக்கப்பட்டது