பக்கம்:மனோன்மணீயம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மனோன் மணியம் பெண்களைப் பற்றிக்கொண்டிருக்கும் கருத்தும் அவன் உள வியல் உணரும் மாண்பினைப் புலப்படுத்தும்: ஒதி புனரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினும் சலன மென்ப. குடிலனை, நாராயணன் அறிந்தவாறே, குடிலனும் தாராயணனை நன்கு அறிந்தவனே. எனவேதான் நாராய னனை வினையறி நாரணன்" எனத் தன் மனத்தே எடை போட்ட அவன், எதுவுமிங் காரணன் இருக்கில் அபாயம்! என்று கருதுகின்றான். அடுத்து நாராயணரேல் தீரமாய் மொழிகுவர்" என்றும் தோராயணரே நன்மதி உடையோர் என்றும் படைவீரரி பேசும் பேச்சுக்கள், நாராயணனின் அரச பக்தியினையும் அறிவு மேம்பாட்டினையும் அறைய வல்லனவாகும். சகடர் தன் மகள் வானியைப் பலதேவனுக்கு மணமுடிக்க மன்னன் தயவை நாடும்பொழுது நாராயணன், 'கிழவனின் அழுகை" என்று மன்னன் கூறிய அளவில் சிலவருடந்தான்" என்றும். நெடு நாள் நிற்கும் இளையவர் அழுகை" என்றும் கூறுவதில் தான் எத்துணைக் கருத்தாழம் பொதிந்து கிடக்கின்றது! நாராயணன் நல்ல போர் மறவன். படைவீரர் தன்னைச் சுற்றிச் சூழ்ந்து புகழும் பொழுதும் அமைதியான மனநிலை யோடு அவர்களை நோக்கி, சிறுமையும் பெருமையுஞ் செய்பவர்க்கு அன்றிச் செய்வினை தனக்கு ஏது? மெய்மையில் யாவுக் திருத்தமாச் செய்தலே பொருத்தம் உத்தமர்க்கு என்று கூறும் கற்றில், எச்செயலினையும் திருத்தமுறச் செய்ய வேண்டும் என்னும் அவன் ஆர்வம் விளங்குகின்றது. கோட்டைமேல் உலவி நிற்கும்பொழுதும், அறியாது ஒரு. வனை அமைச்சாய் நம்பி அரசன் படப்போகும் துன்பதிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/314&oldid=856541" இலிருந்து மீள்விக்கப்பட்டது