பக்கம்:மனோன்மணீயம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 மனோன்மணியம் படுத்திக் கொள்ளும் அளவிலேயே இவன் ஒரு “மடையன்" என்ற முடிவுக்குச் சேரன் செவ்விதின் வந்து விடுகின்றான். மன்றல் வினை பேசச் சென்றவன், மதியினத்தால் மறப் போருக்கு வழி கோலி விட்டு வந்து விடுகின்றான். துளது வனுக்குரிய பண்புகள் ஒன்றும் இவன்பால் இல்லை. இதனைப் புருடோத்தமனும், நன்செய்.நா டதனை காவு கூசாமற் பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும் ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி என்று கூறி அவன் மதியற்ற தன்மையினைச் சுட்டுகின்றான். இத்தகு இழிகுணப் பலதேவன் தான் கற்பழித்து கை விட்ட ஒருத்தியின் தமையனால் போரில் வேலால் தாக்கப் படுகிறான்; உன் நடத்தையால் விளைந்தது இது" என்று தன்னைக் கடிந்துரைத்த தந்தைக்குப் பலதேவன் கூறும் பதில், ■ மன்னனைக் குத்திட உன்னினை ஊழ்வினை என்னையே குத்திட இசைந்தது யார்பிழை? என்பதாகும். இக்கூற்று முற்றும் உண்மையே! குடிலனையே உடனி ருந்தே கொல்லும் வியாதி போன்று, வீயாது அடியுறையும் நிழல் போன்று, தொடர்ந்தே வரும் ஊழ்வினையாக வந்து முளைக்கிறான் பல தேவன். இத்தகைய மகனைக் காட்டி லும் கொடுமனக் குடிலனுக்கு வேறு தகுந்த தண்டனையும் இருக்க முடியுமோ? மகன் மார்பில் புண்பட்டுப் புலம்புவதனையும் பொருட் படுத்தாது, குடிலன், எரிவதென் னுள்ளம் உனை எண்ணும் தோறும், அரியவென் பணமெல்லாம் அழித்தனையே’ என்று நெஞ்சமும் நிறையும் அழிந்துகூற, அதற்குப் பலதேவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/326&oldid=856660" இலிருந்து மீள்விக்கப்பட்டது