பக்கம்:மனோன்மணீயம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பச்சையப்பர் கல்லூரியில் மூன்றாண்டுப் பட்டப் படிப்புப் பயிலும் மாணவர்க்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றியுள்ள மனோன்மணியம்’ என்னும் நாடக நூலினை வகுப்பில் பன்முறை பாடமாக நடத்தியுள்ளேன். அவ்வாறு மாணவர்களுப் பயிற்றுவிக்கின்ற பொழுது, நூலில் மூழ்கிப் பல் கால் திளைத்து மகிழ்ந்துள் ளேன். மேனாட்டு நாடகத்திறனை நன்கறிந்து சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிப் பேராசிரியர் அவர்கள் தம்முடைய முப்பத்தாறாவது வயதில், தமிழிற்கு-சிறப் பாக நாடகத் தமிழிற்கு நல்கிய நல்ல நாடகக் காப்பியம் மனோன்மணியமாகும். இந்நூல் தமிழ் இலக்கியத்தில் தனக்கெனத் தனியானதோர் இடத்தினைப் பாங்குறப் பற்றிக் கொண்டதாகும். மாணவர்களுக்குச் சொல்லித் தருகின்ற பொழுது நூலாசிரியரின் நுண்மையான உள்ளத்தினை ஒருவாறு புரிந்துகொள்ள இயன்றது. நான் கண்டு தெளிந்த வழியே நாடக மாந்தரை நோக்கினேன்; அவர்தம் பண்புநலன்களைக் குறித்து ஆய்ந்து பார்த்தேன். மனோன்மணிய நாடக மாண்பும் எனக்கு ஒருவாறு புலப் பட்டது. இந்நூலினை நான் மாணவ நிலையில் நின்று உணர்ந்துள்ளேன். மாணவர் உள்ளங்களோடு கருத்து களைப் பரிமாறிக் கொண்ட பொழுது எழுந்த என் ஆசிரிய அனுபவம் இந்நூல் எழுதுவதற்குத் துாண்டுகோலாய் அமைந்தது. இந்நூலினைத் தமிழுலகம் ஏற்கும் என்னும் துணிபுடையேன். - சி. பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/5&oldid=856768" இலிருந்து மீள்விக்கப்பட்டது