பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அவரது நாட்குறிப்புகள், அந்த நல்ல மனிதரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பயனுள்ளதாக உள்ளது. இராமநாதபுரம், சென்னை ஆகிய நகரங்களில் மன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், சந்தித்த பெரிய மனிதர் கள், திருக்கோயில் வழிபாடுகள், தேரோட்டம், திரு மேனிகள் புறப்பாடு, குருபூசை, இராமநவமி, மகா சிவ ராத்திரி, சேது நீராடல் போன்ற சமய நிகழ்ச்சிகளில் அவர் உற்சாகத்துடன் கலந்து கொண்டதை தெரிவிக் கின்றன. அவை மக்களது ஆன்மீக வளர்ச்சிக்கு உறு துணையாக அமைய வேண்டும் என்ற அவாவுடைய வராக இருந்தார் என்பதும் இரவு பகலாக விரதம் அனுஷ்டிப்பதிலும், ஆகம விதிப்படி திருக்கோயில் நடை முறைகள் நிகழவேண்டும் என்பதிலும் அவர் கண்டிப் பாக இருந்தார் என்பதும் தெரிய வருகின்றது மன்னரது கட்டுப்பாட்டிலிருந்த இராமேசுவரம்-இாமருகுபுரம், திரு உத்திரகோசமங்கை ஆகிய ஊர்களில் திருக்கோயில் நிர்வாகமும் இசை முதலியனவும் ஆகம விதிகளின் படி நடை பெறுமாறு வலியுறுத்தி வந்ததாக இப்பதிவுகளில் காணப்படுகின்றன. என்றாலும் பழமை விரும்பிகளுக்கும் போலித்தன மான பக்தர்களுக்கும் மன்னரது உயர்ந்த நோக்கமும் உன்னதமான செயல்களும் உடன்பாடாக இல்லாததால் அவர்கள் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தினர். இதனால் மனமுடைந்த மன்னர், தமது இராமேசுவரம் திருக் கோயில் அறங்காவலர்_பதவியை கிடபி-1901-ல் ராஜினாமா செய்தார். கி. பி.-1893ல் இந்தப் பதவியை SATS ஏற்கும்பொழுது அவர் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சி க் கும் கூடுதலான சஞ்சலத்துடன், அதனை அவர் துறக்க வேண்டியதாயிற்று. இது போன்ற செய்திகளையும் இன்னும் அவரது வாழ்க்கை இலக்குகள், ஆசைகள், அவருடன் தொடர்புடையவர்கள், மன்னரால் உதவி பெற்றவர்கள், ஆகியவர்களைப் பற்றிய கணிப்புகளும் கருத்துகளும் அவரது நாட்குறிப்பில் காணப்படுகின்றன. அத்துடன் இராமநாதபுரம் அரண்மனையில் புலியுடன் ஆட்டுக்கிடாய் சண்டையிட்ட அபூர்வமான காட்சி, அவரது அருமைச் சகோதரர் தினகர் அவருக்கு எதிராக