பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ 遭然惠 நோக்கம். த ங் களை ஆடம்பரமாக அலங்காரம் செய்தி கொள்வதிலும் ஜம்பம் பண்ணுவதிலும், திறமை இல்லா விட்டாலும் இருப்பதுபோல் நடப்பதிலும் கடன் வ: க்கி யாவது ஜாலி பண்ணுவதிலும் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். திறமை என்று உண்மையாகவே கருதப்படுகிற அம்சத்துக்கு அவ்வுலகில் மதிப்புக் கிடையாது. உண்மையான திறமை சாலிகள் உண்மையாக உழைத்து உயர்வு காண்பது நிச்சயம் என்கிற நிலை எதுவும் அங்கு செல்லுபடியாகாது. அவ் வுலகில் சுகமாக வாழவும், சிறப்பாக முன்னேறவும் முக்கிய மான சில கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மாதவன் அங்கு புகுந்த சில மாதங்களிலேயே இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து, அவ்வுலகில் நீடித்து வாழ்வதற்கு மட்டுமல்ல, நன்ருக முன்னேறுவதற்கும் தேவையான யுக்தி களையும் கற்றுக்கொண்டான். தீவிரமாகக் கையாண்டான், பலனும் பெற்ருன். பிறவிப் பெருமாளுக்குக் கதை எழுதுவதிலும், வசனம் தயாரிப்பதிலும் உதவிபுரிந்தான். டைரக்டருக்கு எதெத் கெல்லாமோ உதவினன். புரடக்ஷன் மானேஜருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்தான். முக்கிய நடிகர்களுக்கும், நடிகை களுக்கும் நல்லவனுக விளங்கினன். எல்லோருக்கும் அவனைப் பிடித்துவிட்டது. - w படாதிபதிக்கு அவனே ரொம்ப ரொம்பப் பிடித்தது. *மாதவன்..நீயும் ஒரு ஆக்டிலே வந்து பாரேன்!” என்ருர். என்னலே என்னங்க நடிக்க முடியும்!’ என்று தலையைச் சொறிந்தான் அவன். ஒவ்வொருவனும் ஒரு நடிகன் தாம்ப்பா. அதை வளர்க் காததஞலே அது வீணுகிவிடுது. நீ சும்மா நடி தம்பி' என்று உற்சாகப்படுத்தினர் முதலாளி. சும்மான்ன காசில் லாமே என்கிறதுக்குச் சொல்லலே அப்பேன்! பணம் தரா மல் இருப்பேன?’ என்று ஹாஸ்யமும் பண்ணினர்.