பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹீரோ - #39 இன்ப விருந்தும் இன்சுவை உணவும் பெற்று மகிழ்ந்து, தன் வீடு திரும்புவதற்குத் தயாராக இருந்த மாதவன் பெரிய நிலைக்கண்ணுடி முன் நின்று தன்னை பெருமையோடு பார்த்துக் கொண்டான். அவனுக்குப் பொங்கி வந்த ஆனந்தத்தால் முகம் சிரிப்பாக வெடித்தது, விரிந்தது. - அங்கே வந்து நின்ற ஜெவத்தியைப் பார்த்ததும் அவன் சிரிப்பு அடக்கமுடியாமல் சிதறியது. முன்னிலும் அதிகமான கவர்ச்சியோடு சிங்காரித்து வந்துநின்ற அவள் தனது அலங் காரத்தில் ஏதாவது குறை இருக்குமோ என்று தன்னையே பார்த்துக்கொண்டாள். பிறகு அவன் அருகில் வந்து இடித்த படி நின்று கண்ணுடியில் பார்த்தாள். இப்ப ஏன் இத்தனை சிரிப்பு?’ என்ருள். ஜெவந்தி, உனக்கு மறந்துவிட்டது என்றே தோன்று கிறது. முன்பு ஒருநாள் நீ என்னைக் கேவலமாகக் கருதினய். தெருவில் நடந்துகொண்டிருந்த என்னை அலட்சியமாகப் பார்த்து, கேலியாகச் சிரித்து, அவமதித்தாய். இன்று... இன்று..." சிரிப்பு அவனை பேசவிடாமல் தடுத்தது. அவன் எண்ணியபடி-எதிர்பார்த்தபடி-ஜெவந்தி நடந்து கொள்ள வில்லை. அவள் நாணித் தலைகுணியவில்லை. அவமானத்தால் முகம் சிவக்கவில்லை. அழுது, ஏசவுமில்லை. அவள் முகம் வியப்பால் முழுதலர்ந்தது. அவள் கண் களில் தனிப் பிரகாசம் நிறைந்தது. இதழ்கள் மோகன மாய்ப் பிரிந்தன. முத்துப் பற்கள் கவர்ச்சி நிறைந்து காணப் பட்டன. 'இப்படியே இவளே முத்தமிட வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது அவனுக்கு. அப்படியா! எனக்கு ஞாபகமில்லை!" என்ருள் ஜெவந்தி. அதனலென்ன! காலம் எப்படியோ ஆட்டி வைக்கிறது" என்றும் பேசினள். நீங்கள் ராஜா மாதிரி ஆகி விட்டீர்கள்" என்று சொன்னவள் அவன் தோளில் தொத்தி, முகத்தில் இதழ் பதித்தாள். -