பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 39 பிள்ளை உத்திரவிடவும், வேலு பெட்டியைத் திறந்து பரிசோதித்தான். எல்லாம் சரியாக இருந்தன. ஒரு திருகாணி, ஒரு தம்பிடிக்காசு கூடக் குறையவில்லை. நீங்கதான் எனக்கு வாழ்வு தந்தீங்க" என்று நன்றி உணர்வோடு, பேச்சு தழுதழுக்க, கண்ணிர் வடிய, வேலு: அவர் முன் விழுந்து கும்பிட்டான். சித்தப்பா, நீங்கதான் எங்க வீட்டிலே விளக்கேத்தி வைத்த தெய்வம்' என்று அகிலாண்டமும் கீழே விழுந்து வணங்கிளுள். சேச்சே, என்ன இது! இதெல்லாம்தான் எனக்குப் பிடிக்காது’ என்று சிடுசிடுத்தார் பிள்ளை. தேவமார்கள் எங்களுக்கு உத்திரவு கொடுங்க" என்று ஆரம்பித்தார்கள். "நீங்க விடியக்காலையிலிருந்து எதுவும் சாப்பிடலேன்னு தெரியுது. உங்க முகமே சொல்லுதே. எல்லாரும் சாப்பிட்டு விட்டுப் போங்க என்ருர் பிள்ளை. தேவர்கள் தயங்கினர்கள். வேண்டாம் என்ருர்கள். இலைபோட்டாச்சு, உட்காருங்க" என்று சமையல் காரன் உபசரித்தான். ‘நமக்குள்ளே சண்டையா கட்சியா? நீங்க நம்ம வீட்டிலே ஏன் சாப்பிடக் கூடாது?’ என்று உரிமையோடு பேசி, அவர் களுக்கு வயிறு நிறையச் சோறு போட்டு, வெற்றிலைபாக்கும் கொடுத்து அனுப்பிவைத்தார் அவர். மகராஜபிள்ளை முரட்டுப் பேர்வழி. என்ருலும், சமயம் வந்தால் குழந்தைபோல் உறவுகொண்டாடி மகிழவும் தயங்கமாட்டார். எந்தச் சமயத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று எவராலும் நிதானிக்க முடியாது. அவருக்கு அவரே ராஜா. அவர் தாமே சொல்வதுபோல், நம்பினபேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு எமராஜா!'