பக்கம்:மன்னிக்கத் தெரியாதவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னிக்கத் தெரியாதவர் 5巫 வாக அருகே நடந்து, ஆறுதல் கூறிஞன். அவளுக்கு நம்பிக்கை ஊட்ட முயன்ருன் அவள் கண்ணிரைத் துடைத் தான். அவளை அவன் தாய் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட முன் வந்தான். 'எந்த மூஞ்சியோடு நான் அம்மா அப்பா முகத்திலே முழிப்பேன்? நான் செத்துப் போறதுதான் எனக்கும் நல்லது; மத்தவங்களுக்கும் நல்லது என்று உருக்கமாகப் புலம்பினுள் அவள். - அவனுடைய பிடிவாதமும் மன உறுதியும், தைரியமான வார்த்தைகளும் வெற்றிபெற்றன. சண்பகம் இருளோடு இருளாக ஊரைவிட்டு வெளியேறிஞள். அத்தான் துணை யோடுதான். - அவன் அவளை அவள் பெற்ருேர் வீட்டில் சேர்ப்பித்தான். பூசி மெழுகும் பேச்சுக்கள் கூறிவிட்டு அவன் போய்விட்டான். உண்மை பெற்ருேருக்குத் தெரியாமல் போகுமா? மகராஜபிள்ளைதான் அவர்களுடைய அருமை மகளின் பெருமையை அவர்களுக்கு அறிவிக்காமல் இருப்பாரா? பெற்ருேள் வயிற்றில் தீ புகுந்தது! அவர்கள் வாழ்க்கையில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று! தந்தை குதித்தார். கோபித்தார். அந்த இடத் திலேயே உன்னை வெட்டிப்பொங்கலிடாமல் வெளியே பிடித்துத் தள்ளிளுரே, அதுவே அவருடைய பெருந் தன்மையைக் காட்டுது’ என்று பாராட்டுரை வேறு வழங் கினர். அம்மைக்காரி தலையில் அறைந்துகொண்டு ஒப்பாசி வைக்கலாஞள். என் வயித்திலே இப்படி ஒருத்தி வந்து பொறக்கணுமா?’ என்று வயிற்றில் அடி அடி என்று அடித்துக் கொண்டு கதறினுள். அடிபாவி, என் கையாலேயே உனக்கு பச்சைநாவியைக் கொடுக்கிறேன் பாரு. குடி கெடுக்கிற சண்டாளி!' என்று ஏசிளுள். "இந்த வீட்டுக்கு வந்ததே தப்பு’ என உணர்ந்த சண்பகம் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்து விடுவது என்று துணிந்து கிளம்பி ரயிலடி நோக்கிப் போளுள்.