பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளில் ஒளி 99 தம்மால் தம்மால் இயன்றதைச் செய்ய முன் வருவது மிக்க நலம் பயக்கும். ஒருவர் பொரு ளினை ஈட்டிப் பெருக்குவதாற் பணியாற்ற முடியுமா, அன்றிப் பொருளினைப் பிறர்க்கென அடியோடு விட்டுவிடுவதால் தொண்டாற்ற முடி யுமா என்று ஆராய்ந்துகொண்டு இருப்பதைக் காட்டிலும், எவ்வாருவது பொருளைப் பொது நலத்திற்குப் பல வழிகளிற் பயன்படுமாறு செய் தல் நல்லது. இதல்ை, இருளில் உழலுவோர் பலர் ஒளியுறுவர் என்பது வெளிப்படை. உயிர்களை மதிக்கவேண்டும் என்ற காரணத் தால், ஒருவர் சில வேளைகளில் தம்முடைய உரிமை களைக்கூட விட்டுக்கொடுத்தல் வேண்டுவதாய் இருக்கும். பிற உயிர்களை மதிக்கும் காரணத்தால், பிற உயிர்களைப்பற்றி எண்ணும் காரணத்தால் ஒருவர் கைக்கு எட்டிய பழங்களை எல்லாம் பறித்து விடுதல் கூடாது என்ற எண்ணம் பெறுவர். அதனுல், சாதாரண மக்கட்கு அறியாமை என்று தோன்றக்கூடிய செயலை ஒருவர் சில வேளைகளிற் செய்ய முற்படலாம். சாதாரண மக்களால் அவ மதிக்கத் தக்கதாக ' உயிரின் தொழுதகைம்ை ” இருந்தாலும், அது சிறந்தது என்பதில் யேமில்லை என்று பல வேளைகளிற் சுவைட்சர் சுவைப்பட எடுத்து மொழிந்துள்ளார். பிற உயிர்களை மதிக்க வேண்டும் என்ற தத்துவத்தால், பொருள்வசதி உள்ளவர்கட்கும் இன்ப வாழ்க்கை உடையவர் கட்கும் ஒரு பெரும்பொறுப்பு உண்டாகிறது. ஒருவர் எவ்வளவிற்கு எவ்வளவு மகிழ்ச்சி உடைய