பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னுயிர்க்கு அன்பு 51 சிறிய டாக்டர் என்றும் ஆப்பிரிக்கர்கள் சொல்லத் தலைப்பட்டார்கள். டாக்டர் சுவைட்சர் மருத்துவ மனையைப் புதிதாகக் கட்டுதற்கும் செப்பனிடு தற்கும் இப்பொழுது நேரம் பெற்ருர். விரைவில் நாற்பது நோயாளர்கள் படுப்பதற்கு உரிய இடங்கள் செவ்வையாயின. 1925-இல் இன்னுெரு டாக்டர் வந்தார்; மறுபடி இன்னொரு தாதி வந்தார். நாளடைவில் வெள்ளையர் நோயாளர்கள் தங்குதற்கு உரிய இடங்கட்ட அமைக்கப்பட்டு விட்டது. சுவைட்சர் மருத்துவ மனையை முதலில் நீக்ரோவர்க்கே என்று கட்டினர். எனினும், மருத்துவ மனை நல்ல வளர்ச்சியுற்றுவிட்டதாலும், வெள்ளையர் நோயாளர்கள் பலர் வந்து சேர்ந்த தாலும், அவர்கட்கும் இடம் அமைத்துத் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மருத்துவமனை யின் வளர்ச்சிக்கு உரியவகையிற் பொருள் கிடைத்துவிட்டது. அந்த ஊரிற் கூரைக்குப் போடப்படும் ஒலைக் கற்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குத்தான் நிற்கும். அல்லா மலும், பெருமழை பெய்தலை அக்கற்கள் தாங்க மாட்டா. எனவே, ேேராப்பாவிலிருந்து இருப்புத் தகடு பெற்றுக் கூரை போடவேண்டுமென்று டாக்டர் சுவைட்சர் கருதினர். ஒரு புது இடத்திற் புதுக் கட்டிடத்தை மருத்துவ மனைக்காக எழுப்ப வேண்டுமென்று சுவைட்சர் நினைக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. மருத்துவமனையில் நாற்பது கட்டிடங்கள் நாளடைவிற் கட்டப்பட்டுவிட்டன. அது ஒரு மருத்துவ மனைபோன்று காட்சியளிக்க