பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வயது முதிர்ந்த நிலையில் நிரம்ப உள்ளார்கள். இவற்றையெல்லாம் கண்ட டாக்டர் சுவைட்சருக்குச் சில நேரங்களிற் கோபம் வந்தாலும், அவருடைய நல்லியல்பு அதனை அடக் கிக் கொள்ளும்படி செய்துவிட்டது. இறுதியில், கப்பலிலிருந்து இறங்கிய பிறகு, வரவேற்புக் குழு வினர்கள் எல்லாம் வீட்டிற்குத் திரும்பிய பிற்பாடு, கும்பலிலிருந்து விலகிப்போய்த் தம்முடைய ஊருக்கு மூன்ருவது வகுப்புப் பிரயாணி வண்டி யிலே அவர் போய் ஏறுவார். தம்முடைய பெட்டி களைத் தாமே தூக்கிக்கொண்டு அந்தப் புகை வண்டியில் அவர் ஏறும் காட்சி பலராலும் வியக்கப்படுவதாயிற்று. அவர் மீண்டும் 1952-இல், ந்ேது மாதங்களுக் குள் லாம்பரீன் திரும்ப முடிவு செய்துவிட்டார். இப்பொழுது பிரஞ்சு கல்விச் சங்கத்தின் (French Academy) உறுப்பினராக அவரைச் சேர்த்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி அவருக்குக் கிடைத்தது. பிரஞ்சு கல்விக் கழகத்தில் உறுப் பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவதென்பது மாப்பெருமைகளில் ஒன்று. உறுப்பினராகச் சேர்த் துக்கொள்ளப்படுபவர் சங்கத்தில் ஒரு பெருஞ் சொற்பொழிவு ஆற்றுதல் வேண்டும் என்பது விதி. அவ்வாறு 1952-இல் அவராற் கல்விச் சங்கத்தார் முன் இயற்றப்பட்ட சொற்பொழிவு வெளியாகியுள் ளது. அதனுள் அற வழி ' என்பது ஒவ்வொரு வரும் தம்தமக்கும் பிறர்க்கும் செயலாற்றிக்கொள் ளும் வழி என்பதை அவர் விளக்கியுள்ளார். தம் மைப்பற்றி நினைக்கும் மக்கள் நாளடைவில் பிறர்