பக்கம்:மன்னுயிர்க்கன்பர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அறிஞரின் அருங்கருத்துக்கள்

இன்னு எனத்தான் உணர்ந்தவை துன்னுமை

வேண்டும் பிறன்கண் செயல் ?? என்று கூறினர். இதைப் போன்ற கருத்துக்கள் பலவற்றைக் கேட்ட அளவில் விடுதல் பயன் இல்லை என்றும், கேட்டபடியும் கற்றுள்ளபடியும் ஒருவர் ஒழுகுதல் வேண்டும் என்றும் திருவள்ளுவர் வற். புறுத்தினர். ' கற்றபின் அதற்குத் தக நிற்க” என்ருர், நல்ல நூல்களை ஒருவர் படித்து அறிந்து கொண்டால் மாத்திரம் போதாது; பிறருக்கு எடுத்து உரைத்தால் மாத்திரம்போதாது. அறிந்த வாறும், எடுத்து உரைத்தவாறும் தாமே செயலாற்ற வேண்டும் என்று திருவள்ளுவர் வற்புறுத்தினர்; ஓதி உணர்த்தாலும், பிறர்க்கு எடுத்து உரைத் தாலும், தாமே அதற்குத்தக நடக்கவில்லை எனின், பயனில்லை என்று வற்புறுத்தினர். இக்கொள்கை களைச் சுவைட்சர் முற்றிலும் தாங்குபவர். மக்கள் தத்தம் ஆன்ம நலத்திற்கு மட்டும் முயன்றுகொண்டு, உலகத்தையும் உலகப் பொருள் களையும் வெறுத்து ஒதுக்கிவிடுதல் ஆகாது என்று பேரறிஞர் சுவைட்சர் எண்ணுபவர். மக்கள் பிறரும், உயிர்கள் பிறவும் நன்ருக வாழவேண்டும் என்று மனத்தால் எண்ணி, வாயால் துதித்தல் மாத்திரம் காணுது என்று கருதினவர் சுவைட்சர். மக்கள் பிறரும் உயிர்கள் பிறவும் நன்ருக வாழ் வதற்காக ஒவ்வொருவரும் தத்தம்மால் ஆவன செய்தல் வேண்டும் என்று விரும்புபவர் அவர். மன்பதைகளுக்குக் கேடு செய்யக்கூடாது என்ற அளவில் நம்பிக்கொண்டு, ஒதுங்கி வாழ்வது